/tamil-ie/media/media_files/uploads/2023/04/ipl-ticket.jpg)
எஸ்.பி. வேலுமணி
தமிழ்நாடு சட்டப் பேரவையில் பேசிய எதிர்க்கட்சி அ.தி.மு.க கொறடா, எஸ்.பி. வேலுமணி ஐ.பி.எஸ் மேட்ச் பார்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததைக் குறிப்பிட்டு, நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களைப் போட்டு ட்விட்டரைக் கலக்கி வருகிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க கொறடா எஸ்.பி. வேலுமணி, “அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. தற்போது 300, 400 பாஸ் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு கொடுக்கவில்லை. அதனால், எம்.எல்.ஏ.க்களுக்கு
இதற்கு பதிலளித்து பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, “4 வருடங்களாக சேப்பாக்கத்தில் போட்டியே நடக்கவில்லை; யாருக்கு வாங்கி கொடுத்தீர்கள்? ஐ.பி.எஸ் போட்டியை பிசிசிஐ நடத்துகிறது. உங்கள் நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவிடம் கேட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டிக்கெட் வாங்கலாம். நாங்க சொன்னா கேட்க மாட்டார். நீங்க சொன்னா கேட்பார்.” என்று உதயநிதி கிண்டலாகக் கூறினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவையில் பேசுவதற்கு எத்தனையோ மக்கள் பிரச்னை இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க கொறடா எஸ்.பி. வேலுமணி இப்படி எம்.எல்.ஏ.க்களுக்கு ஐ.பி.எல் போட்டியைக் காண இலவச பாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறாரே என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து கேள்வி எழுப்பினர்.
அண்ணா வேலுமணி ண்ணா, ரெண்டு @IPL ticket 🎫 இருக்கு வேணுமாண்ணா…? @SPVelumanicbe pic.twitter.com/mqZlgqvYJ9
— சாவித்ரி 👩🏽🔬 (@Gayashaba) April 12, 2023
அந்த வரிசையில், ஐ.பி.எஸ் போட்டியைக் காண பாஸ் கேட்ட எஸ்.பி. வேலுமணியைக் கலாய்த்து, “வேலுமணிண்ணா, 2 ஐ.பி.எல் பாஸ் இருக்கு வேணுமாண்ணா..!: ” என்று கேட்டு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு சமூக ஊடகங்களைக் கலக்கி வருகிறார்கள்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிப் பிரபலம் யோகி, பெண் வேஷத்தில், “வேலுமணிண்ணா, 2 ஐ.பி.எல் பாஸ் இருக்கு வேணுமாண்ணா..!: ” என்று கேட்கும் மீம்ஸ் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
~2000rs IPL ticket free uh கேக்குரிய நீ யாறுயா
— Makkath Abbas (@Makkath_Abbas) April 11, 2023
~ என்னைய தெரியல நான் பல கோடி சொத்துவச்சிக்ர Ex.Minister pic.twitter.com/jrw36OtXkG
“ரூ.2,000 ஐ.பி.எல் டிக்கெட் ஃப்ரீயாக கேக்குறீயே நீ யாரு?” என்று கேட்க, வடிவேலும் குரலில், “என்னைய தெரியல நான் பல கொடி சொத்து வச்சிருக்கிற எக்ஸ் மினிஸ்டர்” என்று மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளனர்.
எப்படி இருந்த கட்சி இப்போ சட்டசபை ல வந்து IPL ticket கேட்டுட்டு இருக்கானுங்க
— Sam (@blossomman94) April 11, 2023
அடுத்து ஜெயிலர் படம் 1st Day 1st show ticket லாம் கேப்பானுங்க போலயே 🤷♂️🤷♂️🤷♂️ pic.twitter.com/UQGd8K3NhY
தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க-வின் எஸ்.பி. வேலுமணி ஐ.பி.எஸ் போட்டியைக் காண பாஸ் கேட்டது குறித்து, “எப்படி இருந்த கட்சி இப்போ சட்டசபைல வந்து ஐ.பி.எல் கேட்டுட்டு இருக்காணுங்க.
மக்கள் பிரச்சனையை சட்டசபையில் பேச முன்வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி pic.twitter.com/JIYAaFKWlK
— mani vbm தமிழ் நாடு (@mani_vbm) April 12, 2023
அடுத்டு ஜெயிலர் படம் 1st டே 1st ஷோ டிக்கெட்லாம் கேப்பானுங்க போலயே” என்று ஒரு நெட்டி மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.
முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்கள் பிரச்னையை பேசத்தான் பேரவைக்கு வந்துள்ளோம். வேலை, வெட்டி இல்லாமல் வெட்டியாகவா அமர்ந்துள்ளோம். மக்கள் பிரச்னையை அ.தி.மு.க-வினர் பேசாமல் யார் பேசுவது” என்று கேள்வி எழுப்பினார்.
|ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏ.-க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
— 𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲 (@SALTcity2023) April 12, 2023
~ அப்படியே #Leo first day ticket கூட வாங்கி தரோம் சட்ட சபை பக்கம் வந்துடாதீங்க 😂😂 pic.twitter.com/WC903rR7RC
ஒரு நெட்டிசன் இதைக் குறிப்பிட்டு, “அப்படி என்ன பிரச்னையை பேசுனிங்க” கேட்டு, எஸ்.பி. வேலுமணி பாஸ் கேட்டதைக் குறிப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.
மற்றொரு நெட்டிசன், “அப்படியே லியோ ஃபர்ஸ்ட் டே டிக்கெட் கூட வாங்கி தரோம். சட்டசபை பக்கம் வந்துடாதீங்க” என்று மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.
சட்டப்பேரவையில், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க சட்டமன்றக் கொறடா எஸ்.பி. வேலுமணி, ஐ.பி.எல் போட்டியைக் காண பாஸ் கேட்டது குறித்து டிவிட்டரில் வெளியன மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
மீம்ஸ் 1:
😂😂😂எடப்பாடி பழனிசாமி
— P.D.ஹரிபிரசாத் (@Haripra33339999) April 12, 2023
சபாநாயகர் அய்யா நம்ம ஆளு எஸ்.பி.வேலுமணி முக்கியமான மக்கள் பிரச்சினைய பத்தி பேசனுமா அவருக்கு மைக் தாங்க.
சபாநாயகர்:
சொல்லுங்க சார் என்ன பிரச்சனை...?
SP வேலுமணி:
அய்யா MLAங்களுக்கு IPL மேட்ச் பாக்க பாஸ் வேணும்!!!
@admkfalis pic.twitter.com/wNSv3ziDzH
மீம்ஸ் 2:
டயர்ஸ்: ஏ.. இங்க பருடி .. சட்டசபையில் ஆளும் திமுக அரசை கிழித்து தொங்க விட போய் கொண்டிருக்கிறார்..
— K.K (@kkmadurai9) April 11, 2023
SP வேலுமணி: அட.. நானே IPL பார்க்க ஓசி பாஸ் கேட்க போய் கிட்டு இருக்கேன் .. நீங்க வேற... pic.twitter.com/DXm0z8gIPw
மீம்ஸ் 3:
இவனுகள என்னதான் சொல்றது....#பழனிச்சாமி #வேலுமணி #அதிமுக pic.twitter.com/CrwfwZRS0l
— VINCENTRAJA (@JVRAJAA) April 11, 2023
மீம்ஸ் 4:
எஸ்பி.வேலுமணி:
— 🎵முகவரி🎙முத்து🎵 (@muthurthy) April 11, 2023
ஆளுங்கட்சி விளையாட்டுத் துறை அமைச்சரை பார்த்து கேட்கிறேன். ஒரு IPL மேட்ச் பார்க்க கூட எங்களுக்கு பாஸ் தர மறுக்கிறார்கள்.! இரக்கமில்லையா உங்களுக்கு.?
சட்டசபையில மக்களுக்கு ஆதரவா ஏதாவது பேசுவாங்கன்னு பார்த்தா...இவங்க போய் என்ன கேக்குறாங்க பாருங்க.சார்.!! pic.twitter.com/K7SAqLplG0
மீம்ஸ் 5:
மக்கள் பிரதிநிதிகள் அதிமுக MLAகளுக்கு IPL பார்க்க டிக்கெட் வேனும் ~வேலுமணி
— 🌄Anbe Sivam🌄 (@Anbe_sivamoffl) April 11, 2023
அப்பாவு: அங்கயும் போய் வெளிநடப்புதான் செய்யபோற உனக்கு எதுக்கு இந்த வேலை pic.twitter.com/YHVQKZvpPK
மீம்ஸ் 6:
மீம்ஸ் 7:
மீம்ஸ் 8:
ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதற்கு எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும்; கடந்த ஆட்சியில் பாஸ் வழங்கப்பட்டது
— 🔥 DESPOTER 🔥 (@despoters_12345) April 11, 2023
- சட்டப்பேரவையில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
அட மானங்கெட்ட ஆயோக்கிய பசங்களா... pic.twitter.com/SxdbZQNhru
மீம்ஸ் 9:
ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதற்கு எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும்;
— கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2) April 11, 2023
- சட்டப்பேரவையில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
# அப்படியே சியர் கேர்ள்ஸ் கூட செல்பி எடுத்துக்க அனுமதி வேணும்னு கேட்க மறந்துட்டீங்க தலைவரே pic.twitter.com/sEmZGww0mG
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.