கடவுளையும் விட்டுவைக்கவில்லை காற்று மாசு : வாரணாசியில் கடவுள் சிலைகளுக்கு முகமூடி அணிவிப்பு...

Airpollution - idols wear masks : வட இந்தியாவில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளதால், வாரணாசியில் உள்ள கோயிலில் சிலைகளுக்கு முகமூடி...

வட இந்தியாவில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளதால், வாரணாசியில் உள்ள கோயிலில் சிலைகளுக்கு முகமூடி அணிவிக்கப்பட்ட போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியின் சிக்ரா பகுதியில் உள்ள சிவபார்வதி கோயிலில் உள்ள சிவன், துர்கை, சாய் பாபா உள்ளிட்ட சிலைகளுக்கு வெள்ளை முகமூடி அணிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு தான் காற்றின் மாசு அபாயகர அளவை எட்டியுள்ளது. இந்த காற்றின் மாசுபாடுகளிலிருந்து கடவுள் சிலைகளை பாதுகாப்பதற்காகத்தான், முகமூடி அணிவிக்கப்பட்டுள்ளதாக அக்கோயிலின் அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, குளிர்காலத்தில், கடவுள் சிலைகள் போர்வைகள் அணிவிப்பதுபோன்று தான் இந்த நிகழ்வும். காற்று மாசுபாடுகளிலிருந்து கடவுள் சிலைகளை பாதுகாக்க முகமூடி அணிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோயிலுக்கு வரும் பக்தர்களும்,கோயிலின் இந்த நடவடிக்கையை பார்த்தபின், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே, காற்று மாசு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அறுவடைக்குப்பின் வேளாண்கழிவுகளை எரிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்த எரிப்பு நிகழ்வுகள், 2,900 இடங்களில் நடைபெற்றிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 5ம் தேதி) 6,600 இடங்களுக்கு மேல் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன்காரணமாகவே, வடமாநிலங்களில் நிலவிவரும் காற்று மாசுபாட்டிற்கான காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றன.

மத்திய அரசின் விஞ்ஞானி கூறியதாவது, காற்றின் வேகம் தற்போது மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் உள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளினால் ஏற்பட்ட புகை, தலைநகர் டில்லி நோக்கி பயணிக்கிறது. அந்த புகையானது, வாரணாசி பகுதியிலேயே இறுதியில் தங்குகிறது. நவம்பர் 7ம் தேதி வரை காற்றின் வேகம் இதேஅளவுக்கு இருக்கும் பின் குறைய துவங்கி மீண்டும் அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close