ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் இருவரும் அழகாக கிண்டல் கேலியில் ஈடுபடும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா 199-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். பாலிவுட் நடிகர் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அமிதாப் மற்றும் ஜெயா பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா பச்சனுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலான வீடியோவில், ஐஸ்வர்யா பச்சன், அமிதாப் பச்சனைக் கட்டிப் பிடித்து, “நல்லவர்” என்று கத்துகிறார். அமிதாப், ஐஸ்வர்யாவை அழகாகவும் அன்பாகவும் “ஆராத்யாவைப் போல நடந்து கொள்வதை நிறுத்து!” என்று கூறுகிறார். ஆனால், “இது அனைவருக்கும் தெரியும்” என்று ஐஸ்வர்யா பதிலளித்தார். பின்னர் அவர் மீண்டும் அமிதாப் பச்சனைக் கட்டிப்பிடிக்கிறார். இருவரும் மனதைக் கவரும் தருணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமனார் அமிதாப் பச்சனின் பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அவரது கடந்த பிறந்தநாளில், ஐஸ்வர்யா, அமிதாப் மற்றும் ஆராத்யா ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு கேமராவுக்கு போஸ் கொடுத்தபடி ஒரு அழகான படத்தைப் பகிர்ந்து “ஹேப்பி ஹேப்பி பர்த்டே டியர்லிங் டார்லிங் தாதாஜி-பா. உன்னை எப்போதும் நேசிக்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது, அமிதாப் பச்சன் தனது வரவிருக்கும் திரைப்படமான ப்ராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அவருக்கு வலது விலா எலும்பில் தசைக் கிழிவு ஏற்பட்டது. நாக் அஸ்வின் இயக்கிய, ப்ராஜெக்ட் கே படத்தில் தீபிகா படுகோனே மற்றும் பிரபாஸ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் ஜனவரி 12, 2024-ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். இதில், ஐஸ்வர்யா நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பொன்னியின் செல்வன் 1 படத்தில், ஐஸ்வர்யா நந்தினி மற்றும் அவரது ஊமை தாய் மந்தாகினி தேவி என இரட்டை வேடங்களில் நடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”