முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் 23 ஆண்டுகளுக்கு முன் நடித்து வெளியாகமல் போன படத்தில் அவர் க்யூட்டாக டான்ஸ் ஆடுகிற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய் 1994-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார். இதையடுத்து, ஐஸ்வர்யா ராய் முதன் முதலாக இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் நடித்தார். இந்தப் படம் 1997-ம் ஆண்டு வெளியானது.
இருவர் படம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி ஆகிய இருவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மோகன்லால் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் பிரகாஷ்ராஜ் கருணாநிதி கதாபாத்திரத்திலும் நடித்தனர். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
ஐஸ்வர்யா ராய் ‘இருவர்’ படத்தில் நடித்த அதே நேரத்தில் பாலிவுட்டில் பாலிவுட் இயக்குனர் அனீஸ் பாஸ்மீ தன்னுடைய புதிய படத்தில் ஐஸ்வர்யா ராயை சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல் உடன் இணைந்து நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருந்தார்.
அனீஸ் பாஸ்மீ இயக்கிய ‘ரதேஷ்யம் சீதாராம்’ என பெயரிடப்பட்ட படம் படப்பிடிப்பு எல்லாம் நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால், அந்தப் படம் வெளிவராமல் போனது. அவ்வப்போது, இயக்குனர் அனீஸ் பாஸ்மீ அந்த படத்தின் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார். தமிழ், இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து புகழ் பெற்றார். பின்னர், அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு ஐஸ்வர்யா ராய் பச்சனாக ஆனார். திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.
ஆனால், ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியாகமல் போன ரதேஷ்யம் சீதாராம் படம் காலத்தில் மக்கள் நினைவுகலில் இருந்தும் மறந்துபோனது.
View this post on Instagram
A post shared by ???????? Queens Of Bollywood ???????? (@queensbolly) on
இந்த நிலையில், குயின்ஸ்பாலி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனீஸ் பாஸ்மீ இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்து வெளிவராமல் போன ரதேஷ்யம் சீதாராம் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ பகிரப் பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
23 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் சினிமாவுக்கு அறிமுகமான கால கட்டத்தில், மிகவும் க்யூட்டாக டான்ஸ் ஆடிய அந்த வீடியோ நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகும், ஐஸ்வர்யா ராய் பச்சனின் அழகான நடன அசைவுகள் அவருடைய ரசிகர்களை மீண்டும் அந்த காலகட்டத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.