இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில், அஜித் நடிகை திரிஷாவுடன் நடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா புரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில், அஜித் குமார் உடன் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
In the final leg of the shoot! 🎬 The journey of persistence edges closer. 🔥#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl @ReginaCassandra #NikhilNair… pic.twitter.com/uOerTwbK41
— Suresh Chandra (@SureshChandraa) December 17, 2024
தாய்லாந்தில் நடைபெறும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சுமார் 6 நாட்கள் நடைபெறுகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் – த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. இதன் பிறகு, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, விடாமுயற்சி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெறும். விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
In the final leg of the shoot! 🎬 The journey of persistence edges closer. 🔥#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl @ReginaCassandra #NikhilNair… pic.twitter.com/orwwK1ZNxe
— Suresh Chandra (@SureshChandraa) December 17, 2024
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில், நடிகர் அஜித் குமார் திரிஷாவுடன் நடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.