காலில் விழுந்த ஷாலினி; அஜித் கொடுத்த க்யூட் கமெண்ட்: வைரல் வீடியோ

நடிகர் அஜித் - ஷாலினி இணையின் புதிய விடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், அஜித் பண்பான குடும்ப மனிதர் என்று தெரியும். ஆனால் அவருக்குள் இவ்வளவு ஹ்யூமர் இருக்கிறதா என்று வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகர் அஜித் - ஷாலினி இணையின் புதிய விடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், அஜித் பண்பான குடும்ப மனிதர் என்று தெரியும். ஆனால் அவருக்குள் இவ்வளவு ஹ்யூமர் இருக்கிறதா என்று வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
ajith shalini

'வீட்டுல போய்ட்டு நான் விழணும்'... ஷாலினி பகிர்ந்த க்யூட் வீடியோ!

நடிகர் அஜித்குமார்-ஷாலினி தம்பதியரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வரலட்சுமி விரத பூஜையின்போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஷாலினி தன் கணவர் அஜித்குமாரின் காலில் விழுந்து வணங்குகிறார். அஜித் முதலில் வேண்டாம் என்று தடுத்தாலும், சுற்றி உள்ளவர்களின் வற்புறுத்தலால் ஷாலினி அதனைச் செய்கிறார். இந்தச் செயல் முடிந்ததும், நடிகர் அஜித், “வீட்டுக்குப் போனதும் நான் விழுகணும்” என்று நகைச்சுவையாகக் கூற, அங்கிருந்த அனைவரும் சிரித்து மகிழ்கின்றனர்.

Advertisment

இந்த அழகான வீடியோவை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என் இதயத்தை உருக்குகிறது" என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து உள்ளார். ரசிகர்களால் இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தபோது அஜித் குமார், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அஜித்குமார்-ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

Advertisment
Advertisements

அண்மையில் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் கார் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய படத்தில் நடிப்பதற்காக தன்னைத் தயார்படுத்தி வருகிறார். 

காதல், பாசம், நகைச்சுவை எனப் பல பரிமாணங்களைக் கொண்ட அஜித்குமார் - ஷாலினியின் இந்த வீடியோ, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தங்கள் பிஸியான வேலைகளுக்கு மத்தியிலும், தனிப்பட்ட வாழ்வில் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பையும், மரியாதையையும் இந்த வீடியோ தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

Viral Actor Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: