ஆட்டோவைப் பார்த்தாலே இனி ‘தல’ய தேடுவோம்: அஜித் வைரல் வீடியோ

நடிகர் அஜித் ஆட்டோவில் பயணம் செய்த வீடியோவை அவருடைய ரசிகர்கள் ‘Man of Simplicitty’ எளிமையான மனிதர் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ajith travelling in auto rickshaw, ajith going in auto rickshaw, viral video, actor ajith viral video, அஜித், ஆட்டோவில் பயணம் செய்த அஜித், வைரல் வீடியோ, தல அஜித், அஜித் ஆட்டோவில் பயணம், ajith going by auto rickshaw, ajith man of simplicity video, ajith man of simplicity viral video, thala ajith viral video

தமிழ் சினிமா துறையில் எளிமையானவர் என்று ரசிகர்களால் புகழப்படும் நடிகர் அஜித் சென்னையில் ஆட்டோவில் பயணம் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் அஜித் குமாருக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இயக்குனர் வினோத் நடிப்பில், அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவருடைய பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று 6 பதக்கங்களை வென்றார். நடிகராக மட்டுமல்லாமல், பைக் ரேஸ், ஃபார்முலா கார், ரேஸ், ஹெலிகாப்டர் ஓட்டுவது என பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம்கொண்ட அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்களை வென்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

நடிகர் அஜித்துக்கு சினிமா துறையிலும் பல ரசிகர்கள் உள்ளனர். அவருடன் நெருங்கி பழகிய பிரபலங்கள் பலர், அஜித்தின் எளிமையை பாராட்டுவது உண்டு. அந்த வகையில், நடிகர் அஜித் தான் எளிமையானவர் என்பதை மீண்டும் பறைசாற்றும் விதமாக, சென்னையில் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அஜித் மிகவும் எளிமையாக ஆட்டோவில் பயணம் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் என்ற எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் நடிகர் அஜித் மிகவும் எளிமையாக ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அஜித் ஆட்டோவில் பயணம் செய்யும்போது பார்த்த ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதையடுத்து, அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் ஆட்டோவில் பயணம் செய்த வீடியோவை அவருடைய ரசிகர்கள் ‘Man of Simplicitty’ எளிமையான மனிதர் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதோடு, நடிகர் அஜித் ஆட்டோவில்கூட பயணம் செய்வார் என்பது தெரியவந்துள்ளதால், அவருடைய ரசிகள் சென்னையில் ஆட்டோவைப் பார்த்தாலே இனி தல அஜித்தை தேடுவோம் என்று கூறி பதிவிட்டு வருகின்றனர்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ajith travelling by auto rickshaw viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com