scorecardresearch

ஆகாஷ் அம்பானி திருமண அழைப்பிதழின் செலவு 1 லட்சத்திற்கும் மேல்… மணமக்களின் பெயரை தங்கத்திலியே வடிவமைத்த அம்பானி!

திருமண அழைப்பிதழிலியே இவ்வளவு பிரம்மாண்டம் என்றால்  திருமணம் எப்படி இருக்கும்?

Akash Ambani-Shloka Mehta’s wedding invitation card
Akash Ambani-Shloka Mehta’s wedding invitation card

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன்,   ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் பிரமாண்டமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் தலைச்சிறந்த கோடீஸ்வர்களில் ஒருவரான   முகேஷ் அம்பானியின் மகன்,  ஆகாஷ் அம்பானி தனது பள்ளித் தோழியும், பிரபல வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகளுமான  ஸ்லோகா மேத்தாவை இந்த ஆண்டு இறுதியில் கரம் பிடிக்க இருக்கிறார்.

இவர்களின் திருமணம்  பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது. அந்த பிரம்மாண்டம் திருமண அழைப்பிதழில் இருந்து தொடங்கியுள்ளது.  வரும் 30 அம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ள நிலையில்,  நேற்று அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி  கல்யாணத்திற்கு  பிரத்யேகமாக வடிவமைத்துள்ள திருமண அழைப்பிதழை  கோவிலில் வைத்து  சாமி  தரிசனம் செய்தார்.

அந்த திருமண அழைப்பிதழை கண்டு பலரும்  வாய் மேல் கை வைத்தனர்.  வெளியில் பெட்டில் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழ் உள்ளே விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியை திறக்கும் போது கோவிலில் கேட்பது போல மணியோசை கேட்கிறது. அதன் மேல் விலையுர்ந்த சில கற்களுடம்  பொருத்தப்பட்டுள்ளன.  இதையெல்லாவற்றையும் கடந்து அழைப்பிதழை திறந்தால் அதிலும் பிரம்மாண்டம். குறிப்பாக மணமக்களின் பெயரில் முதல் எழுத்து தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது.

அதன் ஓரத்தில் வரும் டிசன்களும் தங்கத்தினால் செதுக்கப்பட்டுள்ளன.  பார்ப்பதற்கே மினி கோவில் போன்று தோற்றம் அளிக்கும் இந்த பத்திரிக்கை ஒன்றின் விலை 1 லட்சத்திற்கும் மேல் என்ற தகவலும் பரவி வருகிறது.  இதைப் பார்த்த பிரபலங்கள் பலரும் திருமண அழைப்பிதழிலியே இவ்வளவு பிரம்மாண்டம் என்றால்  திருமணம் எப்படி இருக்கும்? என்று  வியப்புடன் பேசி வருகின்றனர்.  அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Akash ambani shloka mehtas wedding invitation card is as grand as it can get video goes viral