வினோதமாக பறவையின் தோற்றத்தில் வேற்றுக்கிரக வாசிகள்? வைரல் வீடியோ

வினோதமான பறவையின் தோற்றத்தில் காணப்படுகிற வேற்றுக்கிரக வாசிகள் என்று ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவின் பின்னணி குறித்தும் அவர்கள் வேற்றுக்கிரக வாசிகள்தானா என்பதையும் தெரிந்துகொள்வோம்.

By: Updated: December 5, 2019, 08:07:45 PM

வினோதமான பறவையின் தோற்றத்தில் காணப்படுகிற வேற்றுக்கிரக வாசிகள் என்று ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவின் பின்னணி குறித்தும் அவர்கள் வேற்றுக்கிரக வாசிகள்தானா என்பதையும் தெரிந்துகொள்வோம்.

வினோதமாக வெள்ளை நிறத்தில் பறவையின் தோற்றத்திலும் மனித உருவத்தைப் போல இருக்கிற இரண்டு உயிரினங்கள் வேற்றுக்கிரக வாசிகள் என்று ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவை 12 மில்லியன் பயனாளர்கள் பார்த்துள்ளனர். ஆனால், இந்த வீடியோ 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், பார்வையாளர்கள் நினைப்பதுபோல அவை வேற்றுக்கிரகவாசிகள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், ஒரு அறையின் பரண் மேலே பெரிய கண்களுடன் பறவையின் அலகுடன் வெள்ளை நிறத்தில் பறவையைப் போலவும் மனித அமைப்பு போலவும் இரண்டு வினோத உயிரினங்கள் காணப்படுகிறது. இவை நம்முடைய வேற்றுக்கிரக வாசிளின் கற்பனை உருவத்தைப் போல உள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் வியப்பாகவும் உள்ளது. இந்த வீடியோவை ஒருவர் ஏதேச்சையாக டுவிட்டரில் பகிர அது பரபரவேன வைரல் ஆனது. அதற்குள் 12 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அவை வேற்றுக்கிரக வாசிகள்தான் என்று நம்பிக்கொண்டிருக்கையில், டேனியல் ஹாலண்ட் என்பவர் அவை ஆந்தைகள் என்று கூறி வேற்றுக்கிரகவாசிகள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும், அவற்றின் இதய வடிவ முகங்களும் கீழ்நோக்கிய அலகுகளும் பறவை உயிரினங்களின் பண்பு. வீடியோவில் அவற்றின் கவனத்தை ஈர்க்கும்போது, ​​அவைகள் நடத்தையில் கவனமாக இருக்கின்றன. அதனால்தான், வீடியோவில் பறவைகள் எச்சரிக்கையாகத் தெரிகின்றன” என்று ஒரு விலங்கியல் பூங்கா கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உண்மையில், இந்த ஆந்தைகள் இருந்த இடம் ஒரு கட்டுமான தளமாக இருந்ததால், பறவைகள் ஒரு தட்டையான மேற்பரப்பில் இருந்தன. அதனால், அதனுடைய கால்கள் தெரியவில்லை. ஒருவேளை அவை ஏதேனும் கிளையில் இருந்திருந்தால் அவற்றின் கால்கள் தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Aliens like birds but owls viral video reached 12 million viewers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X