Advertisment

பரபரப்பான சாலையைக் கடந்த முதலை; வைரல் வீடியோ

கனடாவில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள பரபரப்பான சாலையை முதலை ஒன்று சாதாரணமாக கடந்து சென்றுள்ளது. முதலை சாலையை கடக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
alligator crossing roads, viral video, montreal, trending, Tamil indian express news, சாலையைக் கடந்த முதலை, மாண்ட்ரியல், பரபரப்பான சாலையைக் கடந்த முதலை, வைரல் வீடியோ, Alligator crossing busy street in montreal, Alligator calmly crosses busy street, Alligator escaping from van, alligator crossing street

19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..

கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரத்தில் சட்டியுபிரியன் அவென்யு அருகே ஜாரி தெரு சாலை வாகனப் போக்குவரத்து மிக்க ஒரு பரபரப்பான சாலை ஆகும். இந்த சாலையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டமும் வாகனப்போக்குவரதும் பிசியாக இருந்தபோது ஒரு முதலை சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுப்பகக்த்துக்கு சாதாரணமாக மெதுவாக கடந்து சென்றுள்ளது. இதனைக் கண்டு வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இறுதியாக அந்த முதலை ஒரு காரின் அடியில் சென்று பதுங்கியது.

முதலை சாலையைக் கடந்ததை மைய்ஸ்ஸம் சமஹா என்பவர் வீடியோவாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர அது இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆனது.

இந்த வீடியோவைப் பார்த்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர் ஒருவர், இது போல விலங்குகள் ஊர்ந்து செல்வதுதான் பெருநகரத்தின் அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.

இன்றைக்கு மாண்ட்ரியலின் வெப்பநிலை என்னவாக இருந்தது. இந்த சிறிய முதலை உறைந்திருக்க வேண்டுமே என்று மாண்ட்ரியலின் சூழலைக் குறிப்பிட்டு ஒருவர் இந்த வீடியோவுக்கு டுவிட் செய்துள்ளார்.

இப்படி முதலை சாலையைக் கடந்த வீடியோவைப் பற்றி பலரும் பலவிதமாக கருத்து தெரிவிக்க, மாண்ட்ரியல் நகர போலீசார், இந்த முதலை ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது என்று உறுதிப்படுத்தினர்.

முதலையை வேனில் கொண்டு செல்லும்போது, அதன் ஊழியர் மதிய உணவிற்காக வாகனத்தை நிறுத்தியபோது தானியங்கி கதவு அருகே சென்ற முதலை அங்கிருந்து தப்பியதாக தெரிவித்தனர். பின்னர், அந்த முதலை மீண்டும் பிடிக்கப்பட்டு வேனுக்குள் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Viral Social Media Viral Canada
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment