/tamil-ie/media/media_files/uploads/2020/01/New-Project-2020-01-06T200655.825.jpg)
Alya manasa baby shower fuction video viral, Sanjeev karthick - alya manasa, actress alya manasa, ஆல்யா மானஸா, ஆல்யா மானஸா வளைகாப்பு, ஆல்யா மானஸா விடியோ, vijay tv serial raja rani, raja rani serial, sanjeev karthick, alya manasa baby shower function, alya manasa shared baby shower function video
Vijay TV Alya Manasa: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் உடன் ஜோடியாக நடித்து காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆல்யா மானஸாவுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. ஆல்யா மானஸாவின் வளைகாப்பு வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
View this post on InstagramPapu ku Baby shower ????????????thank u so much for all your blessing ????
A post shared by sanjeev (@sanjeev_karthick) on
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் பார்வையாளர்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த தொடரில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவிற்கும் கதாநாயகியாக நடித்த ஆல்யா மானஸாவிற்கும் தொலைக்காட்சி தொடர் ரசிகர்கல் மத்தியில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.
தொலைக்காட்சி தொடரில் ஜோடியாக காதலிப்பது போல நடித்த இவர்கள் தொடர்ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது நிஜத்திலும் காதலித்தனர். விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர்களுடைய திருமணம் நிச்சயமானது. அப்போது ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சஞ்சீவ் - ஆல்யா மானஸா ஜோடி திருமணம் செய்துகொண்டனர். ராஜா ராணி தொடர் முடிந்தாலும் இந்த ஜோடிக்கான ரசிகர்களின் ஆதரவு இன்னும் அப்படியே இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர்கள் இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளனர்.
View this post on InstagramA post shared by Alya Manasa (@alya_manasa) on
இந்த நிலையில், ஆல்யா மானஸா கர்ப்பமானதைத் தொடர்ந்து அண்மையில் அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. வளைகாப்பு விழாவில் ஆல்யா மானஸா சஞ்சீவ்விற்கு பன்னீர் தெளித்து மலர் தூவி ஆலம் எடுக்கின்றனர். இந்த வீடியோவை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நெட்டிசன்கள் தொலைக்காட்சி ரசிகர்கள் அனைவரும் ஆல்யா மானஸாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகிவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us