'பச்ச உடம்புக்காரி... இப்படி டான்ஸ் ஆடக் கூடாதும்மா..!'
ராஜா ராணி சீரியல் கதாநாயகி ஆல்யா மானசாவுக்கு, அண்மையில் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், ஆல்யா மானசா தனக்குப் பிடித்த பாடலுக்கு மாஸாக டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்து பாராட்டிய ரசிகர்கள் பலரும் பச்ச உடம்புக்காரி இப்படி டான்ஸ் ஆடக் கூடாதும்மா என்று அன்புடன் அறிவுரை கூறியுள்ளனர்.

alya manasa, alya mansa dance viral video, vijay tv raja rani serial heroine alya manasa, vijay tv, ஆலயா மானசா டான்ஸ் வைரல் வீடியோ,raja rani serial, alya manasa delivery female baby,alaya manasa, Tamil news, Tamil TV news, Tamil television news, Tamil video, Tamil viral video, Tamil trending video, Vijay tv news, Vijay TV serial, தமிழ் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, விஜய் டிவி, ஆல்யா மானசா, ஆல்யா மானசா இன்ஸ்டாகிராம், alya manasa instagram,
ராஜா ராணி சீரியல் கதாநாயகி ஆல்யா மானசாவுக்கு, அண்மையில் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், ஆல்யா மானசா தனக்குப் பிடித்த பாடலுக்கு மாஸாக டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்து பாராட்டிய ரசிகர்கள் பலரும் பச்ச உடம்புக்காரி இப்படி டான்ஸ் ஆடக் கூடாதும்மா என்று அன்புடன் அறிவுரை கூறியுள்ளனர்.
Advertisment
விஜய் டிவி பார்வையாளர்களைக் தொலைக்காட்சி முன்பு கட்டிப்போட்டு வைத்திருந்த ராஜா ராணி சீரியல் கதாநாயகி ஆல்யா மானசாவுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். ஆல்யா ராஜா ராணி சீரியலில் தன்னுடன் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் கார்த்திகேயனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுடைய நிச்சயதார்த்தம் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. திருமணத்துக்குப் பிறகு கர்ப்பமான ஆல்யா மானசாவுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அய்லா என்று பெயர் வைத்துள்ளனர்.
ராஜா ராணி சீரியல் முடிந்தாலும், ஆல்யாவின் ரசிகர்கள் இன்னும் அவரை டிவியில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ஆல்யா மானசா, நடிகை சிம்ரன் - ராஜு சுந்தரம் சேர்ந்து ஆடிய, தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற தனக்குப் பிடித்த பாடலுக்கு மாஸாக டான்ஸ் ஆடியுள்ளார். ஆல்யா மானசா மாஸாக டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இந்த பாடல் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. உங்களில் எத்தனை பேருக்கு இந்தப் பாடல் பிடித்த பாடல் என்று கேட்டு” பதிவிட்டுள்ளார்.
ஆல்யா மான்சாவின் டான்ஸைப் பார்த்து பாராட்டிய அவரது ரசிகர்கள் பலரும் பச்ச உடம்புக்காரி இப்படி டான்ஸ் ஆடக் கூடாதும்மா என்று அறிவுரை கூறிவருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், விஜய் டிவியில் பழைய சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ஆல்யா மானசா - சஞ்சீவ் கார்த்திகேயன் நடித்த ராஜா ராணி சீரிய மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"