இளைஞர் ஒருவர் தான் வளர்க்கும் பூனையுடன் கால்பந்து விளையாடியபோது, அந்த இளைஞர் பந்தை எப்படி அடித்தாலும் அவருடைய பூனை பாய்ந்து பாய்ந்து பந்தை தடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால், கொரோனா பரவலைத் தடுக்க பல நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளன. பொது முடக்கத்தால் அனைவரும் வீடுகளில் முடங்கி இருப்பதால், அனைவரும் தங்கள் மொபைல் போன்கள் மூலம் வித்தியாசமான வேடிக்கையான வீடியோக்களை சமூக வெளியிட்டும் பார்த்தும் வருகின்றனர். இதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில், சமூக ஊடகங்களும் இணையமும் வீடியோக்களால் நிரம்பி வழிகிறது.
அந்த வரிசையில், வெளிநாட்டு இளைஞர் ஒருவர் வீட்டில் தான் வளர்க்கும் பூனையுடன் கால்பந்து விளையாடிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அந்த இளைஞர் பயிற்சி செய்ய வைத்திருக்கும் சிறிய கோல் போஸ்ட்டை வைத்துவிட்டு தான் வளர்க்கும் பூனையை கோல் கீப்பிங் செய்ய வைத்துவிட்டு, சிறிய பந்தை கோல் அடிக்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்த பூனை எப்படி அடித்தாலும் பந்தை தடுத்துவிடுகிறது. எப்படியாவது ஏமாற்றி கோல் அடித்துவிடலாம் என்றாலும் அந்த பூனை உஷாராக பந்தை தடுத்து அந்த இளைஞரின் முயற்சியைத் தடுத்துக்கொண்டே இருக்கிறது.
இந்த வீடியோவில் பூனையின் கோல் கீப்பிங்க் செய்யும் திறமையைப் பார்த்து நெட்டிசன்களே மிரண்டு போயுள்ளார்கள். சிலர், இந்த பூனை மட்டும் மனுஷனா பொறந்திருந்தா நிச்சயமாக இதுதான் நம்பர் ஒன் கோல்கீப்பராக இருந்திருக்கும் என்று பாராட்டி வருகின்றனர். நீங்களும் இந்த பூனையின் சாகத்தைப் பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"