ஒற்றைக் கொட்டாங்குச்சியின் விலை 3 ஆயிரம் ரூபாய்! நம்பமுடியவில்லையா..? நம்பித்தான் ஆக வேண்டும். அமேசான் ஷாப்பிங் தளத்தில் கொட்டாங்குச்சியின் விலை ரூ. 3000 எனவும், இதை ஆஃபரில் ரூ. 1365 க்கு வாங்கலாம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
கொட்டாங்குச்சி அமேசான் ஆஃபர்:
இயற்கை பொருட்களுக்கு இப்போது ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டு விட்டதற்கு இந்த சம்பவம் மிகப் பெரிய உதாரணம். ஆன்லைனில் ஷாப்பிங்கில் தனக்கென தனி இடத்தை பெற்றிருக்கும் அமேசான் தளம் தேங்காய் சிரட்டை எனப்படும் கொட்டாங்குச்சியை ஆன்லைனில் விற்கிறது.
அதன் விலை ரூ. 3000 எனவும்ம், 55 சதவீதம் ஆஃபரில் ரூ. 1365 க்கு வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இயற்கை கொட்டாங்குச்சி என்பதால் சில விரிசல்கள் இருக்கும் என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லை, இந்த கொட்டாங்குச்சியை மாதத் தவணையாக வாங்க வசதியும் செய்யப்பட்டுள்ளது. நம் வீடுகளில் தேங்காயை எடுத்துக் கொண்டு ஓட்டை தூக்கி வீசும் பழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.
ஆனால், இதே கொட்டாங்குச்சியை இன்று அமேசான் தளம் ரூ. 3000 க்கு விற்பனை செய்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்த தமிழர்கள் அழுவதா? சிரிப்பதா? என புலம்பி வருகின்றனர்.
Seriously? ????♀️ pic.twitter.com/btViUdhFbJ
— Rema Rajeshwari IPS (@rama_rajeswari) 15 January 2019
இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், இந்த கொட்டாங்குச்சிக்கு அமேசான் விளம்பரத்தில் 4 மற்றும் 5 நட்சத்திர தரவரிசையும் அளிக்கப்பட்டுள்ளது