Advertisment

கண்டெய்னரை என்ஜினுக்குள் இழுத்து துண்டாக்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்: வைரல் வீடியோ

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் சரக்கு கண்டெய்னரை என்ஜினுக்குள் இழுத்து துண்டாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
American Airlines

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் சரக்கு கண்டெய்னரை என்ஜினுக்குள் இழுக்கும் வீடியோ

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் சரக்கு கண்டெய்னரை என்ஜினுக்குள் இழுத்து துண்டாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒரு சரக்கு கொள்கலனை அதன் இயந்திரத்தில் உள்ளிழுத்து, அதை துண்டாக்கிய மிரட்டலான நிகழ்வின்போது, பதிவான கண்காணிப்பு கேமிரா வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஏ.பி.சி7 படி, கடந்த வியாழக்கிழமை சிகாகோவின் ஓ'ஹரே சர்வதேச விமான நிலையத்தில் விமானம் லண்டனில் இருந்து வந்த சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. 

இந்த வீடியோவில், நான்கு கண்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனம் விமானத்தைக் கடந்து செல்லும் போது விமானம் டார்மாக்கில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அப்போது விமானத்தின் என்ஜின் ஃபேன் திடீரென்று, மூன்று கண்டெய்னர்கள் விமானத்தை நோக்கி இழுக்கப்படுகின்றன. அதில் ஒரு கண்டெய்னர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு துண்டு துண்டாக்கபட்டு சிதறுகிறது. மற்ற இரண்டு கண்டெய்னர்களும் டார்மாக்கில் மேலும் இறங்குகிறது.

இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:

இந்த சம்பவத்தின் விவரமாக படங்களுடன், ‘விண்டி சிட்டி வீல்மேன்’ (@WindyCityDriver) எக்ஸ் பயணரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் என்ஜினில் துண்டு துண்டான எஃகு உலோகம் எஞ்சியிருப்பதைக் காட்டுகிறது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தற்போது சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த பதிவுக்கு பதிலளித்த ஒரு நபர், “என்னுடைய 16 ஆண்டுகளில் வளைவில் பல தீங்கு விளைவிக்கும் விஷயங்களைப் பார்த்திருக்கிறேன். ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு காரணமான ஜெட்வே ஆபரேட்டர்களுக்கு வருத்தமாக இருக்கிறது. மற்றொரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “நான் எப்போதும் அந்தப் பகுதியில் ஓட்டுவேன். கண்டெய்னர் காலியாக இருந்ததா, இருந்தது என்று வைத்துக்கொள்வோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நியூயார்க் போஸ்ட்டின் கருத்துப்படி, இதேபோன்ற சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை சிகாகோ விமான நிலையத்தில் ஒரு ஜெட் ப்ளூ விமானத்துடன் மோதியதில் விமானத்தின் இயந்திர போர்டில் சேதம் ஏற்பட்டது. விமானம் பாஸ்டனில் இருந்து வந்து வாயில் நோக்கி சென்று கொண்டிருந்த போது இது நடந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment