மீண்டும் சேட்டையை காட்டிய சேட்டன்ஸ்... சைக்கிளில் புல்லு கட்டு; வரப்பில் மாடு பிடித்து கொண்டு டிரம்ப் நடக்கும் வீடியோ வைரல்!

சித்திரை விஷூவுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் வகையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ட்ரம்ப் இந்தியராகவே மாறிவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

சித்திரை விஷூவுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் வகையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ட்ரம்ப் இந்தியராகவே மாறிவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Vira Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புல்லுக்கட்டு சைக்கிளில் வைத்துக்கொண்டு, மாடு பிடித்துக்கொண்டு போவது போன்ற வீடியே தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Advertisment

அமெரிக்காவின் 45-வது அதிபராக பொறுப்பேற்றவர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2017 ஜனவரி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அமரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப், 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். அதன்பிறகு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றியை பெற்ற அவர், கடந்த ஜனவரி 20-ந் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொறுப்பேற்றது முதல் தீவிரமாக செயல்பட்டு வரும் ட்ரம்ப், உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தை, பரஸ்பர வரி உயர் என, தொடர்ந்து பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதில், பரஸ்பர வரி உயர்வு உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதே சமயம், வரி உயர்வை அறிவித்தபிறகு, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்திடும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அமெரிக்க நிதியமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார்.

அதிபராக ட்ரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், சமூகவலைதளங்’களில் அவரைப்பற்றிய கார்ட்டூன் மற்றும் ஏ.ஐ. வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளாவில் ஏ.ஐ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாக சித்திரை விஷூவுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் வகையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ட்ரம்ப் இந்தியராகவே மாறிவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்த வீடியோவின் தொடக்கத்தில், ட்ரம்ப் சைக்கிளில் புல்லுக்கட்டு தூக்கிக்கொண்டு வருகிறார். அதன்பிறகு வயல் வரப்பில் மாடு பிடித்துக்கொண்டு செல்கிறார். அடுத்து பொது இடத்தில் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருக்கும் ட்ரம்ப், மரத்தின் மீது ஏறி பூக்களை பறித்துக்கொண்டு இருக்கிறார். அதன்பிறகு பட்டாசு கடையில் குழந்தைகளுடன் இணைந்து பட்டாசு வாங்கும் ட்ரம்ப், வீட்டில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பட்டாசு கொளுத்திக்கொண்டு சிரித்து மகிழ்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Donald Trump

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: