சிலருக்கு வெவ்வேறு மொழிகளை கற்றுகொள்வதில் அதீத ஆர்வம் இருக்கும். வெறு மொழி பேசும் நண்பர்களிடமோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ கற்றுக்கொள்வார்கள். அந்த வகையில், அமெரிக்க யூடியூபர் ஒருவர், தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டு ஆன்லைனில் கற்றுக்கொண்டு பேசிய காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Xiaomanyc என்கிற யூடியூப் சேனலை நடத்தி வரும் அவர், நியூயார்க் நகரத்தில் உள்ள மிகவும் பிரபலமான தோசைக் கடைக்குச் செல்லும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதை தொடர்ந்து, தமிழ் உணவுக் கடைக்கு சென்ற அவர், தமிழிலே பேசி உணவை ஆர்டர் செய்து, அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
அமெரிக்கரின் தமிழால் ஈர்க்கப்பட்ட கடை உரிமையாளர், அவரிடம் இது வீடு மாதிரி, பணம் வேண்டாம் எனக் கூறினார். ஆனால், அவரோ பராவாயில்லை என கூறி சாப்பாட்டிற்கு பணம் வழங்கினார்.
தமிழ் உணவு சாப்பிட்ட அனுபவம் குறித்து யூடியூப் வீடியோவின் கேப்ஷனில் கூறியிருப்பதாவது, தமிழ் மொழியால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இன்னும் பயன்பாட்டில் உள்ள உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகும். இந்தியா, இலங்கையில் பேசப்படும் தமிழ் மொழியை, அமெரிக்காவில் கேட்பது மிகவும் அரிதானது. ஆனால் நியூயார்க் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தமிழ் பேசுபவர்களால் நடத்தப்படும் சில உணவகங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. பழமையான மற்றும் அழகான மொழியில், நான் ஆர்டர் செய்ய முயற்சித்தேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை 9 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. பலரும், யூடியூபரின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
ஸ்மித்துக்கு இலவச உணவு வழங்கப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, குஜராத் உணவகம் ஒன்றுக்கு சென்ற அவர், குஜராத் மொழியில் உணவு ஆர்டர் செய்த போது, அவருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
பின்னர், மற்றொரு இந்திய உணவகத்திற்குச் சென்ற ஸ்மித் குஜராத்தில் பேசி, அங்கிருந்த உரிமையாளரையும் ஆச்சரியப்படுத்தினார். அவர் அளித்த மோரை குடிப்படியே, குஜராத்தி மொழியில் கலந்துரையாடினார். அவருடைய குஜராத்தி நண்பர்கள் சிலர் மொழியை கற்றுக்கொடுத்ததாகவும், உணவு முயற்சி செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.
யூடியூப் சேனலைத் தவிர,மொழி வகுப்புகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் இணையதளத்தையும் ஸ்மித் நடத்தி வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil