New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/02/amruta-fadnavis-759.jpg)
மீம் கிரியேட்டர்களும் இவரது கருத்தை வைத்து மீம் கிரியேட் செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் போக்குவரத்து நெரிசல் எப்போதுமே அதிகமாக இருக்கும். கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரைப் போன்ற அதிக போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரம் மும்பை.
இதனால், காலை நேரத்தில் பணிக்குச் செல்பவர்கள் சீக்கிரமே எழுந்து புறப்படுவார்கள். புறநகர் ரயிலில் செல்ல வேண்டுமானால் கூட பல போக்குவரத்தை நெரிசலை கடந்தே ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டியிருக்கும்.
இந்த நிலையில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக முக்கியத் தலைவருமான தலைவருமான தேவேந்திர பட்னவீஸின் மனைவி அம்ருதா பட்னவீஸ், மும்பையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக 3 சதவீத விவாகரத்து ஏற்படுவதாக தெரிவித்தார்.
#WATCH: BJP leader Devendra Fadnavis' wife Amruta Fadnavis says, "I'm saying this as common citizen. Once I go out I see several issues incl potholes,traffic. Due to traffic,people are unable to give time to their families & 3% divorces in Mumbai are happening due to it." (04.02) pic.twitter.com/p5Nne5gaV5
— ANI (@ANI) February 5, 2022
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாலைகளில் இருக்கும் பள்ளங்கள், போக்குவரத்து நெரிசல் ஆகிய காரணங்களால் மும்பையில் 3 சதவீத விவகாரத்து நடைபெற்று வருகிறது என்றார்.
இவரது கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் மீம் கிரியேட்டர்களும் இவரது கருத்தை வைத்து மீம் கிரியேட் செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் முக்கிய தலைவரான பிரியங்கா சதுர்வேதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘’பெங்களூரு நகர வாசிகள், அம்ருதா பட்னவீஸ் கூறிய கருத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள். உங்கள் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடப் போகிறது’’ என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.