பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் இந்திய அரசியல் தலைவர்களை உற்று நோக்க வைத்துள்ளது. இந்த நேரத்தில் அமுல் நிறுவனம் செய்துள்ள இந்த காரியம் தான் டாக் ஆப் டவுன்.
பிரியங்கா காந்தி அரசியல் பிரவேசம்:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சி நேற்று முன் தினம் (23.1.19) பிரியங்கா காந்தியை அரசியலில் களமிறக்கியது. இவருடைய வருகையை பலர் குறிப்பிடும்போது மாயாவதி மற்றும் அகிலேஷ் கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்த்து கொள்ளாததால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கவே பிரியங்காவை அறிமுகம் செய்துள்ளதாக கணித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகளுடன் கூட்டணி கிடைக்கும் என்ற பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டார். அதிரடி திருப்பமாக பிரியங்கா காந்திக்கு கட்சியில் புதிய பொறுப்பை கட்சி தலைவர் ராகுல் காந்தி அளித்தார்.
உத்தரப்பிரதேசதின் கிழக்குப் பகுதிக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் அரசியலில் பிரியங்காவிற்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது இந்திய அரசியலில் மாபெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது.
பிரியங்காவின் இந்த அரசியல் பிரவேசத்தை அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் பலவிதங்களில் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமுல் கையில் எடுத்த இந்த முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரபல பால் நிறுவனமான அமுல் பிரியங்கா காந்தியின் அரசியல் தகவலை கார்டூனாக வரைந்து வெளியிட்டுள்ளது. இந்த கார்டூனில் ராகுல் மற்றும் பிரியங்கா சீஸ் துண்டுகளை பகிர்ந்து சாப்பிடுகின்றனர்.
#Amul Topical: Priyanka Gandhi joins politics! pic.twitter.com/6Nl7n0s6kg
— Amul.coop (@Amul_Coop) 24 January 2019
அதற்கு கீழ் அண்ணன் மற்றும் தங்கைகளுக்கானது என குறிப்பிடப்பட்டுள்ளது. கூடவே குடும்ப அரசியலை குறிப்பிடும் வகையில் ‘family stree' என்று எழுதப்பட்டுள்ளது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் அமுல் நிறுவனம் பதிவிட்டுள்ளது . அதில் பிரியங்கா காந்தி அரசியலில் கால் பதித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.