Enjoy TrinAmul Mamata Banerjee gets an utterly butterly wish : மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜகவை தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. மத்திய மாநில அரசுகளை சேர்ந்த தலைவர்கள் மமதாவை வாழ்த்திய நிலையில், தன்னுடைய வித்தியாசமான வாழ்த்தை பதிவு செய்துள்ளது அமுல் நிறுவனம்.
34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் நடைபெற்று வந்த இடதுசாரி முன்னணியின் ஆட்சியை 2011ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்தார் மமதா பானர்ஜி. அந்த வெற்றி பயணத்தை அன்று துவங்கிய அவருக்கு செல்லும் இடம் எல்லாம் மக்களின் ஆதரவு பெறுகிய வண்ணமே உள்ளது.
தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த நிலையில் முக்கியமான திரிணாமுல் தலைவர்கள் எல்லாரும் பாஜவிற்கு கட்சி மாறினார்கள். இருப்பினும் தனி ஒரு மனுஷியாக நின்று இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
காலில் அடிபட்ட நிலையில் அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனாலும் நந்திகிராம் தொகுதியில் அவர் தோல்வி அடைந்தாலும் கூட 3வது முறையாக தொடர்ச்சியாக அவர் மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியான இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil