New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1569.jpg)
amy jackson topless photos goes viral - சமூக தளங்களில் வைரலாகும் டாப்லெஸ் ஏமி ஜாக்சன் புகைப்படம்!
எமி ஜாக்சனுக்கும், அவரது காதலரான ஜார்ஜ் பெனாயிட்டோவிற்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்
amy jackson topless photos goes viral - சமூக தளங்களில் வைரலாகும் டாப்லெஸ் ஏமி ஜாக்சன் புகைப்படம்!
'மதராசபட்டினம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மாடலாக இருந்தவர். தொடர்ந்து, தாண்டவம் ஐ, தங்கமகன், கெத்து, தெறி, தேவி என்று பல படங்களில் நடித்த எமி, கடைசியாக ரஜினியுடன் இணைந்து 2.0 படத்தில் நடித்தார்.
இப்படத்திற்குப் பிறகு எந்தப் படங்களிலும் அவர் கமிட்டாகவில்லை. லண்டனில், ஜார்ஜ் பெனாயிட்டோ என்ற தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் தான் கர்ப்பமடைந்து இருப்பதாக அதிர்ச்சிக் கொடுத்தார். கடந்த மார்ச் மாதம் திருமணத்திற்கு முன்னதாகவே தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறினார்.
இதையடுத்து, எமி ஜாக்சனுக்கும், அவரது காதலரான ஜார்ஜ் பெனாயிட்டோவிற்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன் தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
இந்த புகைப்படங்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.