ஆர்வ மிகுதியில் கன்னத்தில் அறைந்த ரசிகை! உடனே ரியாக்ட் செய்த பிரபாஸ் (வீடியோ)

பிரபாஸ் என்று ஆந்திரா பக்கம் சொன்னாலே ரசிகர்களிடம் ஒரு வெறி, ரசிகைகளிடம் ஒரு மயக்கம், கிறக்கம் என பல உணர்வுகளை நீங்கள் பார்க்கலாம்.

டோலிவுட்டில் இவரது மிர்ச்சி, சத்ரபதி, வர்ஷம், டார்லிங், மிஸ்டர்.பெர்ஃபெக்ட் உள்ளிட்ட பல படங்கள், வசூலில் இவரது முன்னணி நாயகனாக உயர்த்த, பாகுபலி வெர்ஷன் இவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் என இவரது சம கால போட்டி ஹீரோக்கள் அனைவரையும் பாகுபலி சீரிஸ் மூலம் போட்டுத் தாக்கினார். அதிலும், பாகுபலி-2 வெளியான பிறகு, ஆந்திராவில் இருந்து புறப்பட்டு, பாலிவுட் வழியாக ஹாலிவுட் சினிமா வரை தனது அடையாளத்தை அழுத்தமாக பதித்தார்.

என்னதான், ஆஜானபாகு உடல் கட்டமைப்புடன் மசில்ஸ் காட்டினாலும், இவருக்கென்று தனி ரசிகைகள் படையே உள்ளது. அல்லு அர்ஜுனுக்கு அடுத்தபடியாக, டோலிவுட்டில் அதிக ரசிகைகள் வைத்திருப்பது நம்ம பாகு தான்.

அதற்கு ஒரு சரியான டெமோ இந்த வீடியோ. விமான நிலையத்தில் பிரபாஸ் வருவதை அறிந்த இளம் பெண் ஒருவர், அவரிடம் செல்ஃபி கேட்க, ஆஜானபாகு கூலாக ஓகே சொல்ல, இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு, அந்த பெண் பிரபாஸ் கன்னத்தில் என்ன செய்தார் நீங்களே பாருங்க,

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close