கண்ணை மூடிக் கொண்டு மழலைக் குரலில் தேசிய கீதம்... இணையத்தை கலக்கிய அருணாச்சல சிறுமி!

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குட்டிச் சிறுமி, தேசிய கீதம் பாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. தனது பள்ளிச் சீருடையில், அப்பாவித்தனமும் தேசப்பற்றும் நிறைந்த குரலில் அவர் பாடியது பலரையும் கவர்ந்தது.

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குட்டிச் சிறுமி, தேசிய கீதம் பாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. தனது பள்ளிச் சீருடையில், அப்பாவித்தனமும் தேசப்பற்றும் நிறைந்த குரலில் அவர் பாடியது பலரையும் கவர்ந்தது.

author-image
WebDesk
New Update
Arunachal Girl

கண்ணை மூடிக் கொண்டு குட்டிக்குரலில் தேசிய கீதம்... இணையத்தை கலக்கிய அருணாச்சல சிறுமி!

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக, குழந்தையின் மனதைக் கவரும் தேசபக்தி, இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், அருணாச்சல பிரதேசத்தின் மூடுபனி நிறைந்த மலைகளில் இருந்து ஒலிக்கும் குட்டிக்குரல், தேசியப்பற்றின் உணர்வை எதிரொலித்து வருகிறது. அந்தக் குட்டிச் சிறுமி, தனது அப்பாவித்தனமான, ஆனால் சக்திவாய்ந்த குரலில் இந்திய தேசிய கீதத்திற்கு உயிரூட்டுகிறார்.

Advertisment

X தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்தச் சிறுமி தனது பள்ளி சீருடையில், கழுத்தில் அடையாள அட்டை அணிந்து காணப்படுகிறார். அவரது 2 குட்டி போனிடெயில்கள் மற்றும் சீருடையில் இணைக்கப்பட்ட சிறிய கைக்குட்டை ஆகியவை அவரை மேலும் ரசிக்கத்தக்க வகையில் காட்டுகின்றன. கண்களை மூடிக்கொண்டு, தனது தாய்நாட்டிற்கு சிறப்பு பரிசாக, இனிமையான குரலில் தேசிய கீதத்தை பாடுகிறார்.

இந்த வீடியோ அவரது பள்ளியின் அசெம்பிளியின்போது பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. தேசத்தின் மீதான பெருமையையும், குழந்தைத்தனமான அப்பாவித்தனத்தையும் கலந்து, 'ஜன கண மன' பாடலை அந்தச் சிறுமி பாடுகிறார். இந்த வீடியோவை, ரோயிங் சட்டமன்ற உறுப்பினர் முட்சு மிதி (Mutchu Mithi) தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தேசிய கீதத்தின் இந்த தவிர்க்க முடியாத இனிமையான பதிவோடு, "அருணாச்சலில் எங்கோ ஒரு குட்டிக்குரல், வலிமையான தேசத்தின் கீதத்தை எதிரொலிக்கிறது. 'நான் இந்தியா, இந்தியா என் உயிர்' என்று உலகிற்கு உணர்த்துகிறது. ஜெய் ஹிந்த்" என்ற வாசகத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.

Advertisment
Advertisements

இந்த வீடியோ சில நிமிடங்களில் சமூக ஊடகப் பயனர்களின் மனதைக் கவர்ந்தது. பலரும் கருத்துப் பிரிவில் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டனர். ஒரு பயனர், "இந்த இந்தியாவின் மகள்கள் மற்றும் பேத்திகள் தான் தேசத்தின் பெருமைமிக்க பாதுகாவலர்களாக இருப்பார்கள். பெருமைமிக்க, அழகான, வலிமையான" என்று எழுதினார். மற்றொருவர், "ரொம்ப கியூட். நம் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள வோக் மாணவர்களை விட இவர்கள் தான் அதிக தேசபக்தர்களாக மாறுவார்கள்" என்று குறிப்பிட்டார்.

"இணையத்தில் உள்ளேயே மிகவும் கியூட்டான விஷயம்" என்று ஒருவர் கூறினார். "அந்த குட்டிக்குரலில், அருணாச்சலின் மலைகளையும் இந்தியாவின் இதயத்தையும் நான் கேட்கிறேன். தேசபக்தி என்பது வெறும் பாடப்படுவது மட்டுமல்ல, வாழ்வதும் கூட என்பதை இது நினைவூட்டுகிறது. ஜெய் ஹிந்த்!" என்று ஒரு நபர் பதிவிட்டார். பலரும் இந்தச் சிறுமியின் தேசபக்திப் பாடலைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு குட்டிச் சிறுமியின் குரல், ஒற்றுமையின் உணர்வை அழகாக எடுத்துரைக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: