மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, சமீபத்தில் வைரலான சென்னையைச் சேர்ந்த பி.ஹெச்.டி மாணவரைப் பாராட்டியுள்ளார். பயோடெக்னாலஜி டாக்டர் பட்டம் பெற்ற தருல் ராயன் என்பவர் பி.ஹெச்.டி படித்து வருகிறார். இவர் சென்னையில் உணவு தள்ளு வண்டி கடை நடத்தி வருகிறார். இவர் இக்கடையை நடத்திக் கொண்டே தனது கல்வி செலவுகளையும் கவனித்து வருகிறார்.
இவரது கடையை கூகுள் மேப்ஸில் கண்டு அமெரிக்க யூடியூப் கிறிஸ்டோபர் லூயில் அங்கு சென்று உணவு சாப்பிட்டு அதை வீடியோ பதிவு செய்தார். அப்போது ராயன் தான் பி.ஹெச்.டி படித்துக் கொண்டே இக்கடையை நடத்தி வருவதாக கூறினார். மேலும் கூகுளில் தமது பெயரை உள்ளிட்டால் தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரைகள் வரும் என்று கூறியுள்ளார். லூயில் வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. உணவு கடை நடத்திக் கொண்டு பி.ஹெச்.டி படிக்கும் மாணவர் என சமூக வலைதளங்களில் கவனம் பெற்றார்.
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தருல் ராயனைப் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "இந்த வீடியோ சமீபத்தில் வைரலானது. ஒரு அமெரிக்க Vlogger ஒரு PhD மாணவர் நடத்தும் உணவுக் கடைக்கு சென்றார்.
ஆனால் அப்போது நடத்த ஒரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், Vlogger போன் எடுத்த போது சமூக வலைதளத்தில் அவரது கடை பற்றி தேடச் சொல்வார் என்று எதிர்ப்பார்த்த போது அந்த மாணவர் கூகுளின் என்னுடைய பெயர் உள்ளிட்டால் என்னுடைய ஆராய்ச்சி கட்டுரைகள் வரும் என்றார். இது அற்புதமானது. தனித்துவமான இந்தியன்" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“