scorecardresearch

ராம் சரணிடம் ‘நாட்டு நாட்டு’ டான்ஸ் கற்றுக்கொண்ட தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா: வீடியோ

கோல்டன் குளோப் விருது பெற்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த, ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு நாட்டு கூத்து’ பாடலுக்கு நடிகர் ராம் சரணிடம் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா டான்ஸ் கற்றுக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Anand Mahindra, Anand Mahindra tweets, ஆனந்த் மஹிந்திரா, நாட்டு நாட்டு, ராம் சரண், ஆனந்த் மஹிந்திரா டான்ஸ் வீடியோ, Ram Charan, Anand Mahindra and Ram Charan Naatu Naatu, Hyderabad E-Prix, Tamil indian express

கோல்டன் குளோப் விருது பெற்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த, ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு நாட்டு கூத்து’ பாடலுக்கு நடனமாடிய நடிகர் ராம் சரணிடம் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ‘நாட்டு நாட்டு’ டான்ஸ் கற்றுக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசியப் பாடல் என்ற பெருமையை ஆர்.ஆர்.ஆர். படத்தில் எம்.எம். கீரவாணி இசையமைத்த ‘நாட்டு நாட்டு; என்ற தெலுங்கு பாடல் வரலாறு படைத்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது முதல், ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது.

தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா சனிக்கிழமையன்று, நடிகர் ராம் சரணைச் சந்தித்தபோது, கோல்டன் குளோப் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கான நடனத்தைக் கற்றுக் கொண்டார்.

ஹைதராபாத் இ-பிரிக்ஸ் ரேஸின் போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரண் மற்றும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இடையேயான உரையாடல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில், ராம் சரண் மஹிந்திராவுக்கு நாட்டு நாட்டு பாலுக்கான டான்ஸ் ஸ்டெப்களை கற்றுக்கொடுக்க ஆனந்த் மஹிந்திராவும் அதே போல ஸ்டெப்களைப் போட்டு ஆடுகிறார்.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து, “ரேஸ் தவிர, ஹைதராபாத் இ-பிரிக்சில் ஒரு உண்மையான போனஸ் ராம்சரணிடம் நாட்டு நாட்டு பாடலுக்கான அடிப்படையான ஸ்டெப்ஸ்களை கற்றுக்கொண்டென். ஆஸ்கார் விருதாளர்களுக்கு நன்றி, நல்வாழ்த்துக்கள், நண்பரே!” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இதுவரை 64,000 -க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. மஹிந்திராவின் ட்வீட் குறித்து கருத்து தெரிவித்த ராம் சரண், “ஆனந்த் மஹிந்திரா நீங்கள் என்னை விட வேகமாக நடனம் ஆடுகிறீர்கள். இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. ஆர்.ஆர்.ஆர் படக் குழுவின் சார்பில் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Anand mahindra learns the naatu naatu song dance steps with ram charan video goes viral

Best of Express