/indian-express-tamil/media/media_files/2025/09/01/kittambal-anand-mahidran-2025-09-01-17-41-43.jpg)
சாதிப்பதற்கு வயது தடை அல்ல என்பதை கிட்டாம்பாள் நிரூபித்துள்ள்ளார்.
தமிழ்நாட்டின் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் கிட்டாம்பாள் வி. பவர்லிஃப்டிங்கில் அவருடன் போட்டியிட்ட பல இளம் போட்டியாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறார். சாதிப்பதற்கு வயது தடை அல்ல என்பதை கிட்டாம்பாள் நிரூபித்துள்ள்ளார்.
கிட்டாம்மாள் சமீபத்தில் குனியமுத்தூரில் நடைபெற்ற 'ஸ்ட்ராங் மேன் ஆஃப் சவுத் இந்தியா' போட்டியில் பங்கேற்றார். 30 வயதுக்குட்பட்ட 17 பெண்களுக்கு எதிராகப் போட்டியிட்ட அவர், 50 கிலோ எடை கொண்ட டெட்லிஃப்டை அசால்ட்டாகத் தூக்கி, ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். அவரது பேரன்மார்களான ரோஹித் மற்றும் ரித்திக்கின் ஊக்கத்தால், பவர்லிஃப்டிங்கை அவர் ஒரு மாதத்திற்கு முன்புதான் தொடங்கியிருக்கிறார்.
At 82, a woman is lifting not just weights but our spirits., winning powerlifting championships and defying every cliché about age.
— anand mahindra (@anandmahindra) September 1, 2025
She’s a reminder that it’s never too late (or too early) to live with vigour, to dream boldly, and to pursue your goals.
Age or conventional… pic.twitter.com/fCLQO1PoDJ
கிட்டாம்பாளைப் பாராட்டிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, கிட்டாம்பாள் பவர்லிஃப்டிங் போட்டியில் கலந்துகொண்ட வீடியோவைப் பகிர்ந்து பாராட்டியுள்ளார். இது குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “82 வயதில், ஒரு பெண் எடையை மட்டுமல்ல, நம் மனதையும் தூக்குகிறார். பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பை வென்று, வயது பற்றிய ஒவ்வொரு க்ளிஷேவையும் மீறுகிறார்.
வீரியத்துடன் வாழ்வதற்கும், தைரியமாக கனவு காண்பதற்கும், உங்கள் இலக்குகளைத் தொடருவதற்கும் ஒருபோதும் தாமதமாகாது (அல்லது மிக விரைவில்) என்பதை அவர் நினைவூட்டுகிறார்.
வயது அல்லது வழக்கமான ஞானம் வரம்புகளை நிர்ணயிக்காது. உங்கள் மன உறுதியே அதைச் செய்கிறது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த கிட்டம்மாள் வி. எனது ‘மண்டே மோட்டிவேஷன்’ (திங்கள்கிழமை உந்துதல்).” என்று பாராட்டியுள்ளார்.
பவர்லிஃப்டிங்கில் 82 வயதில் சாதித்துள்ள கிட்டாம்பாள், தினமும் 25 கிலோ அரிசி மூட்டைகளைத் தூக்கியும், பல பானைகளில் தண்ணீர் சுமந்தும் பழகியதால், தனது உடல் வலிமை இயற்கையாகவே அதிகரித்ததாக கிட்டாம்மாள் கூறினார். பேரன்களின் உதவியுடன், வீட்டு வேலைகளில் இருந்து உடற்பயிற்சிக் கூடத்திற்கு மாறி, டெட்லிஃப்டிங் நுட்பங்களை ஒரு மாதத்தில் கற்றுக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.
கிட்டாம்மாள் தனது உடல் வலிமைக்கு தனது பாரம்பரிய உணவுமுறைதான் காரணம் என்றும் சிறு வயதிலிருந்தே கேழ்வரகு மற்றும் கம்பு கூழ், முட்டை, முருங்கைக் கீரை சூப் மற்றும் வேகவைத்த காய்கறிகளைச் சாப்பிட்டு வருவதாக கூறுகிறார் என்று எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த எளிய உணவுகள்தான் தனது ஆற்றலுக்கும், இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கவும் காரணம் என்று கிட்டம்பாள் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதற்கான சிறந்த உதாரணம் கிட்டாம்பாள்தான் என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.