Advertisment

ஒற்றை இருக்கை ட்ரோன் உருவாக்கிய பள்ளி மாணவன்; ஆனந்த் மஹிந்திரா பாராட்டு: மத்திய அமைச்சருடன் சந்திப்பு

குவாலியரைச் சேர்ந்த பள்ளி மாணவன் மேதன்ஷ் திரிவேதி மூன்று மாதங்கள் செலவழித்து 80 கிலோ எடையுள்ள ஒருவரைத் தூக்கிக்கொண்டு சுமார் 6 நிமிடங்கள் பறக்கக்கூடிய ட்ரோனை உருவாக்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
drone

குவாலியர் மாணவர் மேதன்ஷ் திரிவேதி தனது புது கண்டுபிடிப்புக்காக ஆனந்த் மஹிந்திராவிடம் இருந்து பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவன் ஒருவன் ஒற்றை இருக்கை கொண்ட ட்ரோன்-காப்டரை சொந்தமாக உருவாக்கிய சாதனையைப் பாராட்டினார். மேதன்ஷ் திரிவேதி, 80 கிலோ எடையுள்ள ஒருவரைத் தூக்கிக்கொண்டு சுமார் 6 நிமிடங்கள் காற்றில் பறக்கக்கூடிய ட்ரோனை உருவாக்க மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளார்.

Advertisment

ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில், திரிவேதியின் சாதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், “இது புதுமையான கண்டுபிடிப்பு பற்றி அல்ல, ஏனெனில், இதுபோன்ற இயந்திரத்தை உருவாக்கும் அறிவு இணையத்தில் உள்ளது. இது இன்ஜினியரிங் மீதான மோகம் மற்றும் வேலையைச் செய்வதற்கான அர்ப்பணிப்பு பற்றியது. இதுபோன்ற இளைஞர்கள் நம்மிடம் எவ்வளவு அதிகமாக இருக்கிறார்களோ, அவ்வளவு புதுமையான தேசமாக மாறுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பாருங்கள்:

Advertisment
Advertisement

 

இந்த வீடியோவுக்கு மஹிந்திராவின் இந்த பதில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த மாணவரின் முயற்சியைப் பாராட்ட பலர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

அனுபவ் துபே, ஒரு தொழில்முனைவோர் கருத்து தெரிவிக்கையில், "புதுமை என்பது அறிவில் மட்டுமல்ல, விஷயங்களைச் செய்வதற்கான ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பிலும் வளர்கிறது" என்று கருத்து தெரிவித்தார்.

மற்றொரு பயனர் எழுதினார், “நன்றாகச் சொன்னீர்கள், நீங்கள் அவர்களுக்கு ஒரு நல்ல ஆதரவாளர் சார். உந்துதலுக்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவது நபர் கருத்துத் தெரிவிக்கையில், “இப்படித்தான் புது கண்டுபிடிப்பு தொடங்குகிறது. இவ்வளவு இளம் வயதிலேயே ட்ரோன் காப்டரை மீண்டும் கண்டுபிடிக்க முயற்சிப்பது பாராட்டுக்குரியது” என்றார்.

நான்காவது நபர் கூறினார், “பள்ளிகள் அத்தகைய திறன்களை வழங்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இந்த திறமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, அது காணவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியாவும் மாணவன் மேதன்ஷ் திரிவேதியை புது டெல்லியில் உள்ள சப்தர்ஜங்கில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை சந்தித்தார், அங்கு அவர் இளம் கண்டுபிடிப்பாளரின் சாதனைக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

திரிவேதியின் கண்டுபிடிப்புகளை ஒரு படிக்கல்லாக பார்க்கவும், எதிர்காலத்திற்கான லட்சிய இலக்குகளை அமைக்கவும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், உலகின் சில முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்கத் தயாராகும்படி அவரை ஊக்குவித்தார், மேலும், முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment