ஆட்டோவில் வீடு கட்டிய அசகாயசூரன்; சென்னை இளைஞரைத் தேடும் ஆனந்த் மஹிந்த்ரா

ஆட்டோவில் வீடு கட்டி அசத்திய அசகாயசூரன் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அருண் பிரபுவை பாராட்டிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, அவருடைய தொடர்பு எண்ணைக் கேட்டிருப்பது சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

anand mahindra, anand mahindra searching chennai youth arun prabhu, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, அருண் பிரபு, ஆட்டோவில் வீடு கட்டிய சென்னை இளைஞர் அருண் பிரபு, arun prabhu designed auto rickshaw house, viral news, tamil viral news

ஆட்டோவில் வீடு கட்டி அசத்திய சென்னை இளைஞரை பாராட்டியுள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா அந்த இளைஞரைப் பார்க்க வேண்டும் என்றும் அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா என்று கேட்டுள்ளார்.

மஹிந்த்ரா குழுமம் நிறுவனங்களின் தலைவர் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா. புதிய முயற்சிகளை பாராட்டுபவர். தொழிலதிபர்களில் வித்தியாசமானவர். ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். சமூக ஊடகங்களில் எல்லாவற்றுக்கும் உடனடியாக பதிலளிப்பார்.

சென்னையைச் சேர்ந்த இளைஞர் அருண் பிரபு என்ற இளைஞர் ஆட்டோவில் 1 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சிறிய வீடு கட்டி பிரபலமானார். இந்த ஆட்டோ வீடு பலருக்கும் பிடித்திருந்தது. இந்த ஆட்டோ வீட்டில், குளியலறை, கழிவறை, படுக்கை அறை, சமையலறை, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் என்று ஒரு வீட்டில் இருக்கும் அத்தனை வசதிகளும் உள்ளது. அதோடு, ஆட்டோ வீட்டின் மேல் 250 லிட்டர் தண்ணீர் டேங்க்கும் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ வீடு பயணம் செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அருண் பிரபு தான் வடிவமைத்த ஆட்டோ வீட்டுக்கு சோலோ 0.1 என்று பெயரிட்டார்.
இந்த ஆட்டோ வீடு கடந்த ஆண்டே சமூக ஊடகங்களில் வெளியாகி பிரபலமானதையடுத்து, இந்த ஆட்டோ வீடு முயற்சியை பலரும் பாராட்டினார்கள்.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, 1 லட்சம் ரூபாய் செலவில் ஆட்டோவில் வீடு கட்டிய இளைஞர் அருண் பிரபுவைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

ஆனந்த் மஹிந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அருண் இந்த சிறிய இடத்தில் வீடு கட்டி தனது திறமையைக் காட்டியுள்ளர். இவர் ஒரு பெரிய ட்ரெண்டில் இருந்துள்ளார். தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில், பயணம் செய்ய விரும்புபவர்கள் எப்போதும் ஒரு நடமாடும் பயணத்தை விரும்புகின்றனர். அவர் எங்களுடைய பொலிரோ பிக்அப் வாகனத்துக்கு இது போன்ற டிசைனில் வடிவமைக்க கேட்க விரும்புகிறேன். அவரைத் தொடர்புகொள்ள எங்களை யாராவது இணைக்க முடியுமா?” என்று ஆனந்த் மஹிந்த்ரா கேட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்த்ரா ஆட்டோவில் வீடு கட்டி அசத்திய அசகாயசூரன் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அருண் பிரபுவை பாராட்டி அவருடைய தொடர்பு எண்ணைக் கேட்டிருப்பது சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Anand mahindra searching chennai youth arun prabhu who designed auto rickshaw house

Exit mobile version