பொலிரோ காரை வச்சுக்கிட்டு அந்த குட்டி ஜீப் தரீங்களா… வில்லேஜ் விஞ்ஞானியால் வியந்த ஆனந்த் மஹிந்திரா

இந்த வாகனத்தில் கியர், கிளட்ச், பிரேக்குகள் மற்றும் காரின் பிற பாகங்கள் உள்ளன. இதற்கு வெறும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் தான் ஆகியுள்ளது. ஆனால், இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார் வாங்கவேண்டும் என்றால், குறைந்தது 1 லட்சம் தேவைப்படும் .

கார், பைக், ஆட்டோ ரிக்‌ஷா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களின் பாகங்களை இணைத்து தயாரிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனத்தை ஒரு குடும்பம் பயன்படுத்தும் வீடியோவை மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அந்த வீடியோவில், கிக் ஸ்டாட் மூலம் வாகனத்தை இயக்கும் தத்தாத்ரய லோஹர், தனது குடும்பத்துடன் சிறிது தூரம் பயணம் மேற்கொள்கிறார். அவர் நான்கு சக்கர வாகனத்தில் பைக் என்ஜினைப் பொறுத்தியதை குறித்தும், ஜீப்பின் பானட் வைக்கப்பட்டுள்ளது குறித்தும், ஆட்ரோ ரிக்ஷா டையர் வைத்தது குறித்தும் மராத்தியில் விளக்குகிறார்.

அந்த வாகனத்தில் கியர், கிளட்ச், பிரேக்குகள் மற்றும் காரின் பிற பாகங்கள் உள்ளன. இந்த பிராசஸூக்கு அவருக்கு வெறும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் தான் ஆகியுள்ளது. ஆனால், இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார் வாங்கவேண்டும் என்றால், குறைந்தது 1 லட்சம் தேவைப்படும் . அவர்களை போறுத்தவரை, அதில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. தத்தாத்ரய, மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் தேவராஷ்ட்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவர்.

இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த மஹிந்திரா, “இந்த படைப்பு எந்த விதிமுறைகளையும் பின்பற்றி உருவாக்கப்படவில்லை. அதேநேரத்தில் இதனை படைத்தவரின் புத்தி கூர்மை மற்றும் திறன்களைப் பாராட்டுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்” என குறிப்பிட்டிருந்தார்.

ஆனந்த மஹிந்திராவின் ட்வீட் சமூக வலைதளத்தில் வைரலாக தொடங்கியது. பலரும், அந்த வில்லேஜ் விஞ்ஞானிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், இந்த வாகனம் தயாரிக்கப்பட்ட விதம், பாதுகாப்பு மற்றும் மாசு விதிகளை மீறுவதால், அதிகாரிகள் இந்த வாகனத்தை சாலையில் அனுமதிக்க மாட்டார்கள் என்று சிலர் கவலை தெரிவித்தனர்.

தொடர்ந்து, அந்த வீடியோவை பகிர்ந்து மற்றொரு ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா, “இந்த வாகனம் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதால் சாலையில் இயக்கப்படுவதை உள்ளூர் அதிகாரிகள் நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே அந்த புதுமையான ஜீப்பிற்கு பதிலாக பொலேரோ காரை வழங்க விரும்புகிறேன். உதிரி மற்றும் உடைந்த பாகங்களால் உருவான அவரது படைப்பு பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் மஹிந்திரா ரிசர்ச் வேல்லியில் அரிய வாகனங்களில் ஒன்றாக காட்சிப்படுத்த உள்ளேன்” என தெரிவித்தார்.

ஆனந்த மஹிந்திராவின் செயலை கண்டு பலரும் ஆச்சரியப்பட்டு பாராட்டி வருகின்றனர். இது பல இளைஞர்களை புதுமையான கண்டுபிடிக்க உதவும் என குறிப்பிட்டனர். ஆனந்த் மஹிந்திரே சமூக வலைதளங்களில் காணும் வித்தியாசமான கண்டுபிடிப்புகளை பாராட்டுவதை வழக்கமாக கொண்டவர்.

இச்சம்பவங்களில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பலரின் திறமைகள் அதன் மூலமே உலகின் பார்வைக்கு வருகிறது. பழங்களை அளவு வாரியாக வரிசைப்படுத்த ராடை பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பொருட்களை பரிமாறிக்கொள்வதற்கு கயிறுகளைப் பயன்படுத்தும் கடைக்காரர், மாஸ்க் மேல் நகை அணியும் பெண் போன்ற பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை தினந்தோறும் காண்கிறோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anand mahindra shares a video of a four wheeler made with jugaad

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com