கத்தாரில் ஃபிஃபா உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் உலகளாவிய நிகழ்வுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆனந்த் மஹிந்திரா, வியாழக்கிழமை ட்விட்டரில் ஆப்பிரிக்க குழந்தைகள் குழு நடனம் ஆடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் குழந்தைகள் ஃபிஃபா பாடலுக்கு நடனமாடுகிறார்கள். இந்த வீடியோ பணம் செலுத்தி செய்யப்படும் விளம்பரத்தை விட கால்பந்தின் உணர்வை சிறப்பாக பிரதிபலிப்பதாக ஆனந்த் மஹிந்திரா கூறுகிறார்.
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த ஒரு நிமிட வீடியோ, கெட்டோ கிட்ஸின் (அல்லது டிரிப்லெட்ஸ் கெட்டோ கிட்ஸ்) நடன நிகழ்ச்சியாகும், இது உகாண்டாவின் கட்வே சேரியைச் சேர்ந்த குழந்தைகளை உள்ளடக்கிய சர்வதேச அளவில் பிரபலமான நடனமாகும். வீடியோவில், 2022 FIFA உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ ஒலிப்பதிவுகளில் ஒன்றான ‘ஹய்யா ஹய்யா’வுக்கு குழந்தைகள் நடனமாடுவதைக் காணலாம்.
வீடியோவைப் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, “FIFA & Qatar உலகக் கோப்பைக்கான விளம்பர வீடியோக்கள்/விளம்பரங்களுக்காக மில்லியன் கணக்கில் செலவழிக்கும். உலகிற்கு கால்பந்து என்றால் என்ன என்பதை உண்மையாகத் தெரிவிக்கும் இந்த மலிவான & மகிழ்ச்சியான வீடியோவைப் போல, அவை எதுவும் மக்களை உற்சாகத்துடன் பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை,” என்று பதிவிட்டார்.
இதுவரை, மஹிந்திராவின் ட்வீட் பதிவிடப்பட்டதிலிருந்து இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், ஒரு ட்விட்டர் பயனர், “நன்றாகச் சொன்னீர்கள்… உண்மையான சாராம்சம் இதயத்தில் உள்ளது விளம்பரங்களில் இல்லை” என்று கமெண்ட் செய்தார்.
நவம்பர் 20 முதல் டிசம்பர் 18, 2022 வரை திட்டமிடப்பட்டுள்ள FIFA உலகக் கோப்பைக்காக கெட்டோ கிட்ஸை கத்தாருக்கு அழைக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்தை எதிரொலித்து, ஒரு ட்விட்டர் பயனர், “யாராவது இதைப் பற்றி ஏற்கனவே யோசித்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த ஹோஸ்ட் நாடுகள் பங்கேற்கும் நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளை WC க்கு சிறப்பு விருந்தினர்களாகக் கொண்டு வந்தால் என்ன செய்வது. அது செயல்முறையை எந்த வகையிலும் வணிகமயமாக்காமல், ஒரு உண்மையான விளம்பர நடவடிக்கையாக இருக்கும், என்று எழுதினார். மற்றொரு நபர், “அவர்கள் கத்தார் ஃபிஃபா போட்டியில் சிறப்பு விருந்தினராக வர வேண்டும். யாராவது கத்தாருக்கு டிக்கெட் கொடுங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil