மின்விசிறியைப் பயன்படுத்தி வீட்டிலேயே கையால் ஐஸ் கிரீம் தயாரிக்கப்படுகிற வீடியோவை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கலவையான கம்மென்ண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
வீட்டில் கைகளால் ஐஸ்கிரீம் செய்வதற்கு ஐஸ் கிரீமாக உறையச் செய்ய ஒரு தற்காலிக உறைவிப்பான் போன்ற கொள்கலனுக்குள் ஊற்றி சீலிங் ஃபேன் உதவியுடன் கலக்கப்படுகிறது. நெட்டிசன்கள் இது அபத்தமான யோசனை என்று விமர்சிக்கிறார்கள். சிலர் இது ‘மலிவான உழைப்பு’ மீதான ஆனந்த் மஹிந்திராவின் கரிசனம் என்று விமர்ச்சிக்கிறார்கள்.
இந்தியாவின் அனல் தகிக்கும் கோடைக் கால மாதங்களில் ஒரு நல்ல ஐஸ் கிரீம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பெரும்பாலான மக்கள் கடைகளில் எளிதில் கிடைக்கும் முன்னரே தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட ஐஸ்கிரீம்களை சாப்பிடப் பழகிவிட்டனர். ஆனால், சிலர் வீட்டில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி கைகளால் ஐஸ்கிரீம் செய்கிறார்கள்.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு பெண் ஒரு சீலிங் ஃபேனைப் பயன்படுத்தி ஒரு தற்காலிக உறைவிப்பான் போன்ற கொள்கலனுக்குள் வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் கலவையை எப்படி புத்திசாலித்தனமாக வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்கிறார் என்பதைக் காட்டுகிறது.
இந்த வீடியோ ட்விட்டரில் 60,000-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. இது குறித்து ஒரு ட்விட்டர் பயனர் “இந்த குடும்பத் தலைவியின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. கடின உழைப்பின் முடிவில் புன்னகையுடனும் அன்புடனும் ஐஸ்கிரீம் பரிமாறுகிறார். அவரைச் சுற்றியுள்ள அனைவரும் அவருடைய கடின உழைப்பைப் பாராட்டி மரியாதை கொடுக்க விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், பலர் இப்படி ஐஸ்கிரீம் செய்வது தேவையில்லாத ஒன்று சோர்வாகப் பார்க்கிறார்கள். ஒரு ட்விட்டர் பயனர் எழுதினார், “இந்த திறனற்ற (அதிக உராய்வுகளுடன்) மற்றும் நேர முழுமையான பாதையை எடுத்துச் செல்வதில் என்ன பயன்? இங்கு பயன்படுத்தப்படாத ஒரே சாதனம் விஸ்கர்/ஹேண்ட்-ப்ளெண்டர் ஆகும். விலைவாசி என்பது இங்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஐஸ்கட்டி இருப்பதால் உறைய வைப்பதும் ஒரு பிரச்சினையாக இருக்காது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு நபர், “இப்படி வீட்டிலேயே கையால் ஐஸ்கிரீம் செய்வதற்கு செலவழித்த உழைப்பின் அளவு அபத்தமானது – மின்விசிறிக்கான மின்சாரக் கட்டணம், அது எப்படி இருந்தது என்பதன் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆபத்துகளைக் குறிப்பிடவில்லை. ஆனந்த் மலிவு உழைப்பை விரும்புகிறார். வறுமையின் மூலம் உந்தப்பட்ட யோசனைகளுக்கான அன்பை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். உண்மை என்னவென்றால், அவர் அதை சாப்பிட மாட்டார் அல்லது அவர்களுக்கு பணம் கொடுக்க மாட்டார்.” என்று விமர்சித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“