Andhra man erects bronze statue of dog : தான் செல்லமாக வளர்த்த நாய் ஒன்றின் 5ம் ஆண்டு நினைவு தினத்தின் போது வெண்கலத்தில் அந்த நாய்க்கு சிலை ஒன்றை எழுப்பியுள்ளார் அந்நாயின் எஜமானர். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார் ஞான பிரகாச ராவ். 9 வருடங்களாக வளர்த்த வந்த நாய் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டது.
Advertisment
Andhra: Bronze statue of dog erected on its fifth death anniversary
இந்த நாய் மீது இவருக்கு இருந்த பாசம் சற்றும் குறையாத நிலையில் அந்நாயின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளின் போது வெண்கலத்தில் சிலை ஒன்றை எழுப்பியுள்ளார்.
நாங்கள் எங்கள் வீட்டு நாயை ஒரு குழந்தை போன்று கவனித்துக் கொண்டோம். பல ஆண்டுகளாக நாங்கள் இந்த நாயை வளர்த்து வந்தோம். மிகவும் விசுவாசமாக இருந்தது அந்த நாய் என்று ஏ.என்.ஐ. நியூஸ் ஏஜென்சியிடம் பேசிய அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil