ஆந்திராவில் ஆஷாட மாதம் முடிந்து முதல் முறையாக மாமியார் வீட்டுக்கு வந்த புதுமாப்பிள்ளைக்கு 100 வகை உணவுகளைப் பறிமாறிய மாமியாரின் உபசரிப்பில் மிரண்டு போன மாப்பிள்ளையின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் நம்ம ஊர் ஆடி மாதம் போல, அங்கே தெலுங்கில் ஆஷாட மாதம் முடிந்து புதுமாப்பிள்ளை மாமியார் வீட்டுக்கு செல்வது மரபு அதன்படி, ஆந்திராவில், திருமணமான ஒர் புதுமாப்பிள்ளை, ஆஷாட மாதம் முடிந்த பின்னர், முதல்முறையாக மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே மாமியார் மருமகனுக்காக 100 வகை உணவுகளை சமைத்து ஒரு பெரும் விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
புதுமாப்பிள்ளை விருந்துக்காக மனைவியின் அருகில் அமர்ந்திருக்கும்போது, மாமியார் 100 வகை உணவுகளையும் முன்னால் வைத்ததைப் பார்த்த புதுமாப்பிள்ளை மிரண்டு போயிருக்கிறார்.சாப்பிடுவதில் விருப்பமுள்ள மாப்பிள்ளையாக இருந்தால், இன்று ஒரு புடிபுடித்துவிடலாம் என்று ஆர்வமாக இருப்பார். ஆனால், சாப்பாட்டில் விருப்பமில்லாதவராக இருந்தால், கண்டிப்பாக 100 வகை உணவுகளைப் பார்த்து மிரண்டு போயிருப்பார். இந்த புதுமாப்பிள்ளையும் மிரண்டுதான் போயிருக்கிறார்.
ஆஷாட மாதம் முடிந்து முதல் முறையாக மாமியார் வீட்டுக்கு வந்த புதுமாப்பிள்ளைக்கு 100 வகை உணவுகளைப் பறிமாறிய மாமியாரின் உபசரிப்பில் மிரண்டு போன மாப்பிள்ளையின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ எக்ஸ் சமூக வலைதளத்தில் ஐ.ஏ.என்.எஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.ஆந்திரா மாமியார் பரிமாறிய 100 வகை உணவுகளைப் பார்த்து புதுமாப்பிள்ளை மட்டுமல்ல, வீடியோவைப் பார்ப்பவர்களும் மிரண்டு போயுள்ளார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“