Advertisment

ஆந்திராவில் டாக்டர்கள் மூளைக் கட்டியை ஆபரேஷன் செய்யும்போது ஜூனியர் என்.டி.ஆர் படம் பார்த்த பெண்: வைரல் வீடியோ

மருத்துவர்கள் மூளைக்கட்டியை அறுவை சிகிச்சை செய்யும்போது, அந்த பெண் ஆக்சிஜன் முகக்கவசத்துடன் டேப்லெட்டில் ஜூனியர் என்.டி.ஆர் படம் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
operation 1

மருத்துவர்கள் மூளைக்கட்டியை அறுவை சிகிச்சை செய்யும்போது, அந்த பெண் ஆக்சிஜன் முகக்கவசத்துடன் டேப்லெட்டில் ஜூனியர் என்.டி.ஆர் படம் பார்க்கும் வீடியோ (Image source: @TeluguScribe/X)

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில், ஆனந்தலட்சுமி (வயது 55) என்ற பெண் மூளை அறுவை சிகிச்சையின் போது,  ஜூனியர் என்.டி.ஆரின் ஆதுர்ஸ் திரைப்படத்தைப் பார்த்த வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனந்தலட்சுமிக்கு விழித்திருக்கும் கிரானியோடமி செய்யப்பட்டது, அங்கே நோயாளி மருத்துவ நடைமுறையின் போது சுயநினைவுடன் இருக்கிறார், அவருக்கு மூளையின் இடது பக்கத்தில் 3.3 x 2.7 செ.மீ கட்டி இருப்பதாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வைரலான பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Watch: Andhra Pradesh woman watches Jr NTR’s ‘Adhurs’ as doctors perform brain surgery, video goes viral

ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து மார்பில் அறுவை சிகிச்சை வயர்கள் பொருத்தப்பட்ட நிலையில் அந்த பெண் டேப்லெட்டில் படம் பார்ப்பதை வீடியோ காட்டுகிறது. தொண்டங்கி மண்டலம், கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண் மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வந்தார். இந்த மூளைக் கட்டி தொடர்ந்து தலைவலி, வலது கை மற்றும் கால்களில் உணர்வின்மை மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுத்தது.  “அந்த பெண் என்.டி.ஆர் ஆதுர்ஸ் திரைப்படத்தைக் பார்க்கும்போது மூளை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்” என்று பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இன்னும் 5 நாட்களில் அந்த பெண் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததற்காக டாக்டர்களை அனைவரும் வாழ்த்தினார்கள்” என்று ஒரு எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர்கள் என்.டி.ஆர்.அதுர்ஸ் படத்தை காட்டி மூளையில் அறுவை சிகிச்சை செய்த வீடியோவைப் பாருங்கள்:

2017-ம் ஆண்டு ஆந்திராவின் குண்டூரில் மூளை அறுவை சிகிச்சையின் போது 45 வயது பெண்ணை மருத்துவர்கள் பாகுபலி 2 pஅடம் பார்க்க வைத்தபோது இதேபோன்ற சம்பவம் நடந்தது. ஏ.என்.ஐ வெளியிட்ட செய்திப்படி, அறுவை சிகிச்சையின் போது அந்த பெண் குரலை இழக்காமல் காப்பாற்ற நோயாளி விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர். மன அழுத்தத்தை பராமரிக்க நோயாளியின் அருகில் ஒரு மடிக்கணினி வைக்கப்பட்டதாக செய்திகள் கூறுகிறது. மேலும், அப்போபிளாக்பஸ்டர் படத்தில் இருந்து ஒரு பாடலைப் பாடும்படி மருத்துவர்கள் கூறினார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment