இதல்லவா மனிதநேயம்… அடிப்பட்ட பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்!

பாம்பின் முதுகு தண்டத்தில் பலத்த காயம்

By: Updated: May 9, 2018, 12:55:21 PM

ஆந்திராவில் பொதுமக்களால் தாக்கப்பட்ட ராஜநாகம் ஒன்றிற்கு மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பை அடித்தால் அது பழிவாங்கும்,  பாம்புக்கு காது கேட்கும் என்று ஏகப்பட்ட  விவாதங்கள், கட்டுக்கதைகள் பாம்பை குறித்து இந்த நவீன உலகத்திலும் இருந்து வருகின்றன. இந்நிலையில், ஆந்திராவில் நடைப்பெற்ற சம்பவம் ஒன்று, பாம்பின் மீது இருக்கும் பயத்தையும் தாண்டி ஒரு  மனிதநேயத்தை அனைவரைக்கும் காட்டியுள்ளது.

ஆந்திராவில் உள்ள ராமசந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரமானந்தா ராவ். இவரது வீட்டுக்கு அருகில் கடந்த சில தினங்களாக ராஜநாகம் ஒன்று நடமாடி வந்துள்ளது. சம்பவதன்று, கிராம மக்கள் நிறைந்திருந்த பகுதிக்கு நுழைந்த பாம்பைக் கண்டு மக்கள் தெறித்து ஓடியுள்ளனர்.

பின்பு,  அவர்கள் கல்லைக் கொண்டு பாம்பை தாக்கியுள்ளனர். இதனால் பாம்பின் முதுகு தண்டத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளது. இதைக் கண்ட பாம்பு பாதுகாவலர்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் பாம்பை  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அடிப்பட்ட பாம்பை  சோதித்து பார்த்த மருத்துவர், முதுகு தண்டத்தில் அடிப்பட்டுள்ள பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்து 8 தைஹ்யல் போட்டுள்ளார். மேலும், 10 நாட்களின் பாம்பு பூரணமாக குணமடையும் என்றும் அதை வரை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் ஆந்திரா ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Andhra pradesh wounded snake undergoes spinal cord surgery

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X