New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/08/LkgWqwmheBHC5TCVY9D6.jpg)
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. தனது அணியின் சொதப்பலான பேட்டிங்கை பார்த்து காவ்யா மாறன் கோபமும், ஏமாற்றமும் கலந்து காணப்பட்டார். இது சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி மீம்ஸ்களாக பரவி வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 போட்டியின்போது அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழந்ததை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் விரக்தியடைந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சொதப்பலான பேட்டிங்கை பார்த்து காவ்யா மாறன் கோபமும், ஏமாற்றமும் கலந்து காணப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது.
கடந்த ஐ.பி.எல் சீசனில் 2-ம் இடத்தைப் பிடித்த SRH, ஷுப்மான் கில் தலைமையிலான GT அணிக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை அளித்ததால், தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது என்றாலே ரசிகர்கள் காவியா மாறனின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று பார்க்கவே ஆர்வமாக இருப்பார்கள். சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றால் காவியா மாறன் கொடுக்கும் ரியாக்ஷனும் தோல்வியைத் தழுவினால் காவியா மாறன் தரும் ரியாக்ஷனும் இணையத்தில் வைரலாகும்.
நேற்றைய ஆட்டத்தில் கூட சன்ரைசர்ஸ் அணி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது, இதை தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பதால் காவ்யா மாறன் கடுப்பாகி அணியை பார்த்து கோபமாக கத்தினார். இது சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆனது. இதனை மீம் டெம்ப்ளேட் போட்டு ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர்.
ஆர்யா என்ற திரைப்படத்தில் பாவனா வடிவேலுவை பார்த்து எம் பொறுமையை ரொம்ப சோதிக்கிறீங்க என்று திட்டுவாரோ அதேபோல் சன்ரைசர்ஸ் அணியை பார்த்து காவியா திட்டுவது போல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.
நேற்று அணி மோசமாக விளையாடியதால் கோபத்தில் காவியா மாறன் கத்தினார். அந்தப் புகைப்படத்தை போட்டு இப்போதான் பார்ப்பதற்கே லட்சணமாய் இருக்கு என்று ரசிகர்கள் சன்ரைசர்ஸ் அணியை கிண்டல் செய்து வருகின்றனர்.
நேற்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக விளையாடி 49 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு ரன்னில் ஏன் அரை சதத்தை தவறவிட்டாய் என்று வாஷிங்டன் சுந்தரின் தந்தை அவரை அடிக்க வருவது போல் வடிவேல் மீம் டெம்ப்ளட்டை போட்டு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.