சீனாவில் தன் பிரெட்டை திருடி தின்ற எலியை ஒருவர் கொடூரமாக கொலை செய்யும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெய்ஜிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஷி. இவர், கடந்த வாரம் பிரெட் பாக்கெட் ஒன்றை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பிரெட்டை எலி ஒன்று தின்று தீர்த்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த ஷி, எலியை குறிவைத்து பிடித்து, தன் ஆத்திரம் தீரும் வரை கொடுமை செய்து கொலை செய்துள்ளார். முதலில், எலியின் கால்களை கயிற்றில் கட்டி அதற்கு மது கொடுத்துள்ளர. அதன்பின் தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிறு எலியென்றும் பாராமல், கொடுமைப்படுத்தி கொலை செய்தது பலருக்கும் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.