New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/27/ZKiDxlukoJlt6C3BVOim.jpg)
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இன்று காலை கோவையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது, ”பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத தி.மு.க அரசை கண்டித்து டிசம்பர் 27-ஆம் தேதி முதல் பா.ஜ.க.,வினர் தங்களது வீட்டின் முன்பு நின்று போராட்டம் நடத்துவார்கள். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், நாம் அனைவரும் வெட்கித்தலை குனிய வேண்டிய நிகழ்வு. இதற்காக கோவையில் உள்ள தனது இல்லம் முன்பு நின்று ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளேன்.
நன்றி - நியூஸ்தமிழ் 24*7
தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இப்போதிலிருந்து செருப்பு அணிய மாட்டேன் என உறுதி ஏற்கிறேன். 48 நாட்கள் விரதம் இருந்து முருகனின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்து தி.மு.க.,விற்கு எதிரான அரசியலை மிக தீவிரமாக முன்னெடுக்க உள்ளோம்.” எனக் கூறினார்.
அதன்படி, நேற்றைய தினம் ஷூவை கழற்றி தனது போராட்டத்தை தொடங்கிய அண்ணாமலை, இன்று தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இச்சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
#VIDEO || பச்சை வேட்டி அணிந்து சட்டை இல்லாமல், தன்னைத் தானே சாட்டையால் அடித்து கொண்டு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டம்!https://t.co/gkgoZMIuaK | #Annamalai | #BJP | #Kovai pic.twitter.com/kDe7UGuSAW
— Indian Express Tamil (@IeTamil) December 27, 2024
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.