Advertisment

தோழியா? காதலியா? கோலி - அனுஷ்கா முதல் வருட திருமண நாளில் லவ்வோ லவ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anushka sharma - virat kohli wedding anniversary, அனுஷ்கா

anushka sharma - virat kohli wedding anniversary, அனுஷ்கா

பாலிவுட் நடிகை அனுஷ்கா - கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட் கோலி இன்று தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடுகிறார்கள். இந்நாளில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment

கடந்த ஆண்டு இதே தினம், இத்தாலியின் நதிக் கரையருகே பாலிவுட் நடிகை அனுஷ்காவும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கினர். இவர்களின் டெஸ்டினேஷன் திருமணம் அடுத்து வரும் பிரபலங்களுக்கு ஒரு டிரெண்டு செட்டராக அமைந்தது.

இவர்களை தொடர்ந்து பலரும் தற்போது அதே இத்தாலி நதிக்கரையை திருமணத்திற்கு புக் செய்து வருகின்றனர். கடந்த மாதம் பாலிவுட் பிரபலங்கள் தீபிகா - ரன்வீர் இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர்.

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண நாள்

இவர்களின் திருமண பந்தம் தொடங்கி இன்றுடன் ஓராண்டாகிறது. இதனையொட்டி இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை கூறிக்கொண்டனர்.

விராட் கோலி தனது ட்விட்டரில், “நேற்று நடந்தது போல இருந்தது. ஒரு வருடம் நிறைவடைந்ததை நம்பவே முடியவில்லை. காலம் வேகமாக கடந்துவிட்டது. என் இனிய தோழிக்கும் வாழ்க்கை துணைக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள். என்றும் என்னவள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

December 2018

மறுபுறம், அனுஷ்காவோ தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் திருமண நாள் நினைவூட்டும் வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அந்த வீடியோவுடன், “நேரம் கடப்பதை உணர முடியவில்லை என்றால் சொர்க்கத்தில் இருக்கிறோம். நல்ல மனிதரை திருமணம் செய்தால் சொர்க்கத்தை பார்க்கலாம்” என்று கணவனுக்கு வாழ்த்து கூறினார்.

December 2018

இதனை பார்த்த இவர்களின் ரசிகர்கள் அனைவரும் ஒரு வருடமாகியும் இந்த தம்பதியின் காதல் குறையாததை கண்டு வாழ்த்து மழையை கொட்டி வருகின்றனர்.

Social Media Viral Virat Kohli Anushka Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment