நடிகை அனுஷ்கா ஷர்மா வைரல் வீடியோ: சாலைப் பாதுகாப்பு குறித்து அறிவுரை

நடிகை மற்றும் இந்திய கிரிகெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா சாலை பாதுகாப்பு குறித்து வீடியோ ஒன்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவை தில்லி போக்குவரத்து காவல்துறையினர் பதிவு செய்து தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

13 வினாடிகள் நீடிக்கும் இந்த வீடியோவில் பொதுமக்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்குமாறு அனுஷ்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“தில்லி போலீஸ் சிறப்பாக செயல்படுகிறது. அவர்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. சாலையில் தடைக்காக போடப்பட்ட கோட்டை மீற வேண்டாம். டிராபிக் சிக்னல் முறையாகப் பின்பற்றுங்கள்.” என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் காட்சியாக்கியுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

×Close
×Close