டாஸ்மாக் வருமானத்தை அதிகபடியாக ஈட்டிக் கொடுத்தற்கு பாராட்டு தெரிவித்து கரூர் மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் வழங்கியது சர்ச்சையாகி உள்ளது.
எல்லா ஆண்டும் குடியரசு தினவிழாவில், சாதனைபடைத்த அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவிப்பார். இதுபோல எல்லா மாவட்ட நிர்வாகமும, பல்வேறு அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும்.
இந்நிலையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளயாட்டு அரங்கில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக உள்ளாட்சி துறையில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு பாரட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மதுபானம் விற்பனையில் அதிக லாபம் ஈட்டிய டாஸ்மாக் நிறுவனத்தின் ஒரு விற்பனையாளர், 2 மேற்பார்வையாளர், 4 மாவட்ட மேலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இது வைரலாகி வருகிறது. மதுபானம் விற்பனை செயதவர்களுக்கு மட்டும்தானா? பாராட்டு அதிகமாக குடித்த எங்களுக்கு கிடையாதா என்று நெட்டீசன்கள் மீஸ் பகிர்ந்து வருகின்றனர்.