scorecardresearch

என்ன இன்னிக்கு பெட்ரோல் – டீசல் ரேட்டு ஏறல… ட்ரெண்டிங் ஏப்ரல் ஃபூல் தின மீம்ஸ்!

April Fool’s Day latest and trending tamil memes: இன்று ஏப்ரல் ஃபூல் தினத்தை முன்னிட்டு நெட்டிசன்கள் சுவையான மீம்ஸ்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

April Fools Day trending Tamil Memes

Tamil memes news: இன்று ஏப்ரல் 1ஆம் தேதி உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் யாரும் யாரிடமும் ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பதற்காக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வேண்டுமென்றே ஏமாற்றி அவர் ஏமாந்த பின்பு “ஏப்ரல் ஃபூல்” என்று கூறுவது வழக்கம்.

அந்த வகையில், இன்று ஏப்ரல் ஃபூல் தினத்தை முன்னிட்டு நெட்டிசன்கள் சுவையான மீம்ஸ்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

முட்டாள்கள் தினம் – April Fool மீம்ஸ்:

கடந்த 10 நாட்களாக பெட்ரோல் – டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று பெட்ரோல் – டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முட்டாள்கள் தினனத்தை முன்னிட்டு இப்படி செய்துள்ளார்களா? என்று கேள்வியெழுப்புவது போல் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: April fools day trending tamil memes