கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் ஏ.ஆர். ரகுமான் பாடல் பாடினார். இதனால் அந்த அரங்கமே அதிர்ந்தது.
கேரளா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.
ஏ.ஆர். ரகுமான் பாடிய கேரளா கேரளா பாடல்:
இவர்களுக்கு முன்னதாகவே ரகுமான் பல உதவிகளை செய்து வந்தார். இதற்காக ரசூல் பூக்குட்டி அவருக்கு டுவிட்டர் மூலம் நன்றியும் தெரிவித்தார்.
கேரளாவிற்காக ரகுமான் பாடியபோது
இதனை தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சி ஒன்றில் கேரளாவிற்காக ஒரு பாடல் பாடியுள்ளார் ஏ.ஆர். ரகுமான். ரகுமானின் ‘முஸ்தஃபா முஸ்தஃபா’ என்ற பாடல் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலை நிகழ்ச்சி மேடையில் பாடிய ரகுமான் திடீரென ‘நாம் அனைவரும் கேரளாவிற்காக பாடலாம்’ என்றார். உடனே அவர், ‘கேரளா கேரளா டோண்ட் வரி கேரளா... காலம் நம் தோழன் கேரளா’ என்று பாடினார்.
இவரின் இந்த பாடலுக்கு அரங்கமே அதிரும் வகையில் அங்கிருந்தவர்கள் பெரும் கரகோஷத்தை எழுப்பினர். இந்த வீடியோ தற்போது இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.