Advertisment

உங்களை யோசிக்க வைக்கும் ஒரு விடுகதை; ட்ரை பண்ணி பாருங்க ஆச்சரியமாக இருக்கும்!

உங்களுடைய கணக்கு அறிவுக்கு ஒரு சவால், இதற்கு அல்ஜிப்ரா எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை. சாதாரணமான கணக்கு அறிவு இருந்தால் போதும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
you are Tiger in Maths, can you solve this mathematic puzzle, chhottabheem, mathematic questions, கணக்குல புலியா நீங்க, உங்களுக்குதான் இந்த புதிர், கணக்கு புதி, Are you Tiger in Maths, can you solve this mathematic puzzle

கணக்குல புலியா நீங்க? உங்களுக்கான புதிர்! photo: Chhottabheem.com

Puzzle for Maths in Tiger: பள்ளியில் படிக்கும்போதில் இருந்து பலருக்கும் கணக்கு பாடம் என்றாலே புடிக்காது. சிலருக்கோ கணக்கு பாடம் என்றால் அல்வா சாப்பிடுவதுபோல இருக்கும்.

Advertisment

ஆனால், கணக்கு என்பது ஒன்றும் பெரிய கடினமான பாடம் அல்ல. நாம் மற்ற பாடங்கள் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதைப் போல கணக்கு பாடம் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமான விஷயம், நமக்கு கணக்கு சொல்லிகொடுக்கும் ஆசிரியர், நமக்கு ஆர்வத்தை தூண்டும் விதமாக கணக்கு பாடத்தை சுவாரசியமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அது அப்படி எதுவும் நடக்காவிட்டால், நாம் தான் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், எனக்கெல்லாம் கணக்கு வரவே வராது என்று நொந்துகொள்வதைத் தவிர வழியில்லை.

இப்போது உங்களுடைய கணக்கு அறிவுக்கு ஒரு சவால், இதற்கு அல்ஜிப்ரா எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை. சாதாரணமான கணக்கு அறிவு இருந்தால் போதும், ஆனால், கணக்கு பாடத்தில் புலியாக இருப்பவர்கள் இதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். நீங்கள் கணக்கில் புலி என்றால் இந்த புதிரை எளிதாக தீர்த்துவிடலாம்.

publive-image
கணக்குல புலியா நீங்க? அப்போ உங்களுக்குதான் இந்த புதிர்

இந்த கணக்கு புதிருக்காக சோட்டா பீம் கார்ட்டூனில் வெளியான காட்டூன் படத்தைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இப்போது கணக்குக்கு வருவோம்.

டோலக்பூர் கோட்டையின் மேல் உள்ள அரண்மணையில் ஒரு மருத்துவ குணமிக்க எலுமிச்சை மரம் இருக்கிறது. அந்த மரத்தில் இருந்து ஒரு எலுமிச்சை பழத்தை பறித்துக்கொண்டு வரவேண்டும் என்று நமது சோட்டா பீமின் அம்மா கேட்கிறார்.

இதனால், சோட்டா பீம் காளையா உடன் எலுமிச்சை பழத்தை எடுத்துவர மலை மீது உள்ள டோலக்பூர் அரண்மனைக்கு செல்கிறான். ஆனால், அவர்கள் மலை அடிவாரத்தில் முதல் வாயிலிலேயே காவலரால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.

என்ன காரணம் என்றால், அங்கேயேயும் லஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது.

வாயில் காவலர் அதாங்க செக்யூரிட்டி, உங்களை உள்ளே அனுப்புகிறேன். ஆனால், திரும்பி வரும்போது, நீங்கள் என்ன வாங்கி வருகிறீர்களோ அதில் பாதியை முழுமையாகக் உடைக்காமல், அறுக்காமல், பங்கிட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்று கேட்கிறார்.

சோட்டா பீம்க்கு வேறு வழியில்லை, அம்மா கேட்ட எலுமிச்சை பழத்தை வாங்கி வர வேண்டும் என்பதற்காக ஒப்புக்கொள்கிறான். செக்யூரிட்டியும் சோட்டா பீம்மை உள்ளே விடுகிறான்.

ஆனால், இதே போல, இன்னும் 6 வாயில்கள் உள்ளன. அவர்களும் சோட்டா பீம் வாங்கி வருகிற பொருளில் பாதியை முழுமையாகக் உடைக்காமல், அறுக்காமல், பங்கிட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது, மொத்தம் 7 வாயில்கள் இருக்கின்றன. இந்த 7 கேட் (gate) செக்யூரிட்டிகளுக்கும் சோட்டா பீம் தான் வாங்கி வருகிற பொருளில் பாதியை உடைக்காமல் அறுக்காமல் கொடுக்க ஒப்புக் கொண்டு 7 கேட்களையும் தாண்டி அரண்மனைக்கு உள்ளே சென்று விடுகிறான். ஆனால், சோட்டா பீம்க்கு தேவையோ 1 எலுமிச்சை பழம் மட்டும்தான், அதனால், சோட்டா பீம் 7 செக்யூரிட்டிகளுக்கும் பாதி பழங்களை முழுமையாக கொடுத்துவிட்டு கடைசியாக 1 எலுமிச்சை பழத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், சோட்டா பீம் எத்தனை எலுமிச்சை பழத்தை அரண்மனைக் கோட்டையில் எடுத்து வர வேண்டும் என்பதுதான் புதிர்.

கணக்கு புலிகள் எளிதாகக் கணக்கு போடுவார்கள். சராசரி கணக்கு தெரிந்தவர்கள் மண்டையைப் போட்டு பிச்சிக் கொள்வார்கள்.

விடை கண்டுபிடித்து விட்டிருந்தா, நிஜமாவே நீங்கள் கணக்குல புலிதான். ஆனால், பலரும் தூக்கம் வராமல் சோட்டா பீம் எத்தனை எலுமிச்சை பழம் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இங்கே விடை தருகிறோம்.

சோட்டா பீம் 128 எலுமிச்சை பழங்களை எடுத்து வந்தால், 7 கேட் செய்க்யூரிட்டிக்கும் பாதி எலுமிச்சை பழங்களைக் கொடுத்துவிட்டு, கடைசியில் 1 எலுமிச்சை பழத்தை எடுத்துச் செல்வான். இப்போது கணக்கிட்டுப் பாருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment