புதைத்து வைக்கப்பட்ட வெடிப்பொருள் மற்றும் துப்பாக்கிகள்.. களத்தில் ரியல் ஹீரோவான ஜாரி!

இந்திய ராணுவத்தில் மோப்ப நாய்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக

Army dog jaari  : அஸ்ஸாம் காட்டில் புதைத்து வைக்கப்பட்ட ஆபத்து மிகுந்த வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை தனது உயிரை பணயம் வைத்து கண்டுப்பிடித்தது ஆர்மி நாய் ஜாரி. ரியல் ஹீரோவான ஜாரிக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன.

அஸ்ஸாம் காட்டுப்பகுதியில் அதிபயங்கர கும்பல் ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டு லட்சக்கணக்கில் மதிப்புள்ள வெடிப்பொருட்கள், வெடிக்குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை மண்ணுக்கு அடியில் மறைத்து வைத்தன. இதுக் குறித்த ரகசிய தகவல் இந்தியன் ஆர்மிக்கு சென்றது. அதன் அடிப்படையில் ரகசியமாக அஸ்ஸாம் காட்டுப்பகுதிக்கு வந்த இந்தியன் ஆர்மி முழு சோதனையில் ஈடுப்பட்டனர்.

இந்த இந்தியன் ஆர்மி குழுவினருடன், ஆர்மியில் முழு பயிற்சி அளிக்கப்பட்ட ஜாரி என்ற மோப்ப நாயுடன் உடன் வந்திருந்தது. அதிகாரிகளிடம் கட்டளைப்படி ஜாரி சோதனையை துவக்கியது. சிறிது நேரத்திலேயே வெடிப்பொருட்கள் புதைக்கப்பட்டிருந்த இடத்தை ஜாரி மிகச் சரியாக கண்டுப்பிடித்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது லட்சக்கணக்கில் மதிப்புள்ள வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிக்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த தகவலை புகைப்படத்துடன் இந்தியன் ஆர்மி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.அத்துடன் ஜாரியின் சிறந்த பணியையும் பாராட்டி குறிப்பிட்டிருந்தது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ரியல் ஹீரோவான ஜாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய ராணுவத்தில் மோப்ப நாய்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாகவும் இன்றியமையாததாகவும் இருப்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு சான்றாகும்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Army dog helps detect explosives hidden in assam

Next Story
சிசிடிவி கேமராக்களில் பதிவான கொடூரமான விபத்துகள்! உயிர்காக்க சாலை விதிகளை மதிப்பீர்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com