ஆன்டி இந்தியனையும் தேசபக்தனாக்கிவிடுகிறது இந்த மழலையின் தேசிய கீதம்...

National anthem : அருணாச்சல பிரதேச சிறுவன் பாடும் தேசிய கீதம். அந்த சிறுவன், வரியை மாற்றி பாடியிருந்தாலும், அந்த சிறுவயதில் தேசிய கீதத்தை முழுமையாக பாடுவது என்பது ஒரு கடினமான காரியம் தான்

National anthem : அருணாச்சல பிரதேச சிறுவன் பாடும் தேசிய கீதம். அந்த சிறுவன், வரியை மாற்றி பாடியிருந்தாலும், அந்த சிறுவயதில் தேசிய கீதத்தை முழுமையாக பாடுவது என்பது ஒரு கடினமான காரியம் தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
arunachal boy singing national anthem, boy singing national anthem

arunachal boy singing national anthem, boy singing national anthem, trending, indian express news, தேசிய கீதம், அருணாச்சலபிரதேசம், சிறுவன், வைரல், நெட்டிசன்கள்

அருணாச்சலபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுவன் தனது பிஞ்சு மொழியில் பாடியுள்ள தேசிய கீதம், தேசபற்று இல்லாதவனையும், தேசபக்தனாக மாற்றும்படி அமைந்துள்ள நெட்டிசன்கள், சமூகவலைதளங்களில் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Advertisment

இந்தியா, தனது 73வது சுதந்திர தினத்தை சமீபத்தில் தான் கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ளது. இந்திய சுதந்திர தின கொண்டாட்டம், இந்தியா மட்டுமல்லாது இந்தியர்கள் அதிகம் வாழும் பல்வேறு நாடுகளில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த வீடியோக்கள், சமூகவலைதளங்களில் கொட்டிக்கிடக்கின்றன.

Advertisment
Advertisements

ஆனால், அதை எல்லாம் பின்னுக்கு தள்ளி, நெட்டிசன்கள் புகழ் பாடும் காவியமாக மாறியுள்ளது அருணாச்சல பிரதேச சிறுவன் பாடும் தேசிய கீதம். அந்த சிறுவன், வரியை மாற்றி பாடியிருந்தாலும், அந்த சிறுவயதில் தேசிய கீதத்தை முழுமையாக பாடுவது என்பது ஒரு கடினமான காரியம் தான். அதற்காகவே, அந்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்த வீடியோ, கடந்த மே மாதமே டுவிட்டரில் வெளியிடப்பட்டிருந்தாலும், தற்போது அது வைரலாக பரவி வருகிறது.

பேஸ்புக், மற்றும் டுவிட்டர்வாசிகள், இந்த சிறுவனின் தேசிய கீதம், தங்களின் நெஞ்சை உருக்குவதாக பதிவிட்டுள்ளனர்.

Arunachal Pradesh National Anthem

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: