Tomato price continues to surge : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்ற காரணத்தால் காய்கறி வர்த்து குறைந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக காய்கறிகளின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. பெட்ரோல் டீசல் விலையை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு ரூ. 100-ஐ தாண்டி ஒரே வேகத்தில் பயணிக்கிறது தக்காளியின் விலை. நம்மைப் போன்றே வீட்டில் தக்காளி ரசம் வைத்து சாப்பிட முடியாத நெட்டிசன்கள் தங்களின் மனக்கவலையை நீக்கிக் கொள்ள மீம்களை பகிர்ந்து வருகின்றனர். தக்காளி விலை தற்போது சமயற்கட்டில் பெருங்கவலையாகவும், சமூக வலைதளங்களில் வைரலாகவும் மாறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil