அஸ்ஸாம் மாநில காவல்துறை டி.ஜி.பி-யின் மகள் போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ் பட்டம் பெற்று தனது தந்தைக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அஸ்ஸாம் மாநில காவல்துறை டி.ஜி.பி ஜி.பி. சிங் பகிர்ந்துள்ள வீடியோவில், போலீஸ் சீருடையில் இளம் பெண் தனது தந்தைக்கு வணக்கம் செலுத்துகிறார். டி.ஜி.பி. சிங்குக்கு அவருடைய மகள் சல்யூட் செய்யும்போது அவருடைய சிரித்த முகத்தில் பெருமிதம் தெரிகிறது.
ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியில் (எஸ்.வி.பி.என்.பி.ஏ) பிப்ரவரி 11-ம் தேதி பட்டம் பெற்று இந்தியக் காவல்துறை அதிகாரியாக ஐஸ்வர்யா சிங் வெளியே வந்துள்ளார்.
எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தை வாழ்க்கையில் சிறந்து விளங்கும் போது உண்மையில் அவர்களுக்கு அது ஒரு பெருமையான தருணம். ஒரு குழந்தை அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அதே தொழிலைத் தொடரும்போது அந்த அனுபவம் மிகவும் உற்சாகமானதாக இருக்கும். காவல்துறை அகாடமியில் பட்டம் பெற்ற மகள், அஸ்ஸாமில் டி.ஜி.பி-யாக இருக்கும் தனது தந்தைக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அஸ்ஸாம் மாநில காவல்துறை டி.ஜி.பி ஜி.பி. சிங் பகிர்ந்துள்ள வீடியோவில், போலீஸ் சீருடையில் இளம் பெண் தனது தந்தைக்கு வணக்கம் செலுத்துகிறார். டி.ஜி.பி. சிங்குக்கு அவருடைய மகள் சல்யூட் செய்யும்போது அவருடைய சிரித்த முகத்தில் பெருமிதம் தெரிகிறது.
நான்கு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ ட்விட்டரில் 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. மகளின் சைகை பல அதிகாரிகள் மற்றும் நெட்டிசன்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
“என்ன ஒரு அற்புதமான கணம்!!! மனதைக் கவரும் தருணம்!!” என்று அஸ்ஸாம் மாநில சிறப்பு டி.ஜி.பி ஹர்தி சிங் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ்அதிகாரி, சுபோத் யாதவ் குறிப்பிடுகையில், “இதை விட பெரிய பெருமையான தருணம் இருக்க முடியாது. இது நீங்கள் பெற்ற பாக்கியம். வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுரேந்தர் மெஹ்ரா கருத்து தெரிவிக்கையில், “இது ஒரு பெருமையான தருணம் ஐயா.. ஐஸ்வர்யா ஐ.பி.எஸ்-க்கு வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 27 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் பட்டம் பெற்ற அதே அகாடமியில் இருந்து ஒரு இளைஞன் ஆயுதப் படையில் சேர்ந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரின் இதயங்களை வென்றது . சென்னையின் பாதுகாப்புப் பொதுத் தொடர்பு அலுவலகம், மேஜர் ஸ்மிதா சதுர்வேதியின் (ஓய்வு) புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, ஒரு பெண் அதிகாரிக்கான அரிய மகிழ்ச்சியான தருணம் என்று குறிப்பிடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“