12-foot king cobra : சமீபத்தில் கர்நாடகாவில் ராஜநாகம் ஒன்றை பிடிக்க ஒரு நபர் செய்த முயற்சி பெரும் சர்ச்சைக்குள்ளானது. சிறிது தடுமாறியிருந்தால் ராஜநாகம் அவரை தீண்டியே இருக்கும். மலை கிராமங்கள் மற்றும் மலையை ஒட்டியுள்ள கீழ்நாட்டுப் பகுதிகளில் இருக்கும் கிராமங்களில் நாகங்களை முறையாக கையாள்வது எப்படி என்று மக்களுக்கு கூற வேண்டிய நேரம் இது என்று பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்திருந்தனர்.
ஒருவேளை நீங்கள் இருக்கும் இடத்திற்கு ராஜநாகம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? ஜோஹோவின் நிறூவனர் ஸ்ரீதர் வேம்புவைப் போல் செயல்படுங்கள். உடனே வனத்துறையினருக்கு தகவலை தெரிவித்து ராஜநாகத்தை மக்களிடம் இருந்தும், மக்களை ராஜநாகத்திடம் இருந்தும் காப்பாற்றுங்கள்.
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று எங்களை பார்க்க 12 அடி ராஜநாகம் வந்தது. எங்கள் உள்ளூர் வனத்துறையினர் விரைந்து வந்து அதனை பிடித்து அருகில் இருக்கும் மலைப் பகுதியில் சென்று விடுவித்தனர். மிகவும் தைரியமாக அதனை தொட்டுப் பார்க்கும் நான் என்று அவருடைய புகைப்படத்தையும், அந்த பாம்பின் புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார்.
பலரும் தங்களின் மாறுபட்ட கருத்துகளை அந்த ட்வீட்டின் கீழ் பதிவு செய்துள்ளனர். சிலர், அந்த பாம்பு கடவுளின் அற்புதமான படைப்பு என்று கூறுகின்றனர். சிலர் பாம்பை, புகைப்படத்திற்காக இப்படி பிடித்திருப்பது மிகவும் மோசமான செயல் என்று தங்களின் கண்டன குரல்களையும் பதிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil