Advertisment

அடேய் எலிகளா, செத்தீங்கடா... எங்க தலைவன் வந்துட்டான்!

Hospital hires cat as security officer : எல்வுட், அனைவருடனும் அன்புடன் பழகுகிறான். மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் எங்களது புதிய பாதுகாப்பு அதிகாரியை பார்க்க தவறுவதில்லை

author-image
WebDesk
New Update
Australia, cat, security officer, hospital hires cat as security officer, australia hospital hires cat as security guard, epworth hospital, cute cat, viral cats, trending, indian express, indian express news

ஆஸ்திரேலியாவில் எலித்தொல்லையால் அவதிப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், பூனையை, பாதுகாப்பு அதிகாரியாக நியமித்த சம்பவம், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

திருடர்கள் பயத்திலிருந்து காக்க நாம் வீடுகளில் நாய் வளர்த்து வருவது இயல்பான ஒன்றுதான். ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனை, பூனையை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்து அதன் கழுத்தில் அடையாள அட்டையையும் மாட்டிவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ரிச்மண்ட் பகுதியில் உள்ள எப்வொர்த் மருத்துவமனை அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோக்களும், வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

“Furline Health Worker Elwood has completed his induction at #Epworth! The Erin Street local is often spotted lifting the spirits of patients and staff. Purrfect!, என்று தலைப்பு இடப்பட்டுள்ள அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாங்கள் எல்வுட் என்ற பூனையை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துள்ளோம். மற்ற ஊழியர்களை போன்றே அதற்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

 

எல்வுட், அனைவருடனும் அன்புடன் பழகுகிறான். மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் எங்களது புதிய பாதுகாப்பு அதிகாரியை பார்க்க தவறுவதில்லை என பாதுகாப்பு அதிகாரி சான்டெல் டுராலிப் போர்ட் பாண்டா பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எல்வுட் பூனையின் உரிமையாளரான அலெக்ஸ் வில்லியம்ஸ் கூறியதாவது, எல்வுட் எப்போதுமே எதையோ ஒன்றை தேடியபடியே இருப்பான். இந்த மருத்துவமனையை அது சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கும். அவர்களுக்கும் இந்த பூனை மீது அன்பு வந்த காரணத்தினால், அவர்கள் மருத்துவனையின் எலிகள் கட்டுப்பாட்டு அதிகாரியாக அதனை நியமித்து அடையாள அட்டையும் வழங்கியுள்ளதாக ஹெரால்ட் சன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

publive-image

இந்த போட்டோ மற்றும் வீடியோக்களுக்கு சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - ‘Rodent control officer’: Netizens react after hospital hires cat for security

Video Social Media Viral Trending Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment